பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 367

மாய் வினவுகின்றனர். மேலே சொல்லுகின்றான்; ‘கரியான் ஒரு காளை வந்து என்று தொடங்கி நீலமேக நிறத்தனாய் இளம் பருவமுடையவனான ஒருவன் என் இல்லத்தினுள்ளே புகுந்து என் மகனைப் புறப்படு, புறப்படு' என்று சொல்லிக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகின்றான்; காண்மின்!” என்கின் தான்."

3. கவள யானைக் கொம்பொசித்த (A. 8) : இது திருநாங்கூர்த் திருப்பதிகளில் ஒன்றாகிய பார்த்தன் பள்ளி மீது நடைபெறும் தாய்ப்பாசுரம், 'என் திருமகள் பரகால நாயகி இரவும் பகலும் திருப்பார்த்தன் பள்ளிப் பெருமானுடைய குணசேஷ்டிதங்களையே வாய் வெரு விக் கொண்டு அத் திருப்பதியின் பெயரையே பாடா நின்றாள்' என்று திருத்தாயார் வாயாலே தமது நிலைமையை உரைக்கின்றாள் ஆழ்வார் நாயகி. ஒரு முறைக்கு ஒன்பது முறையாக பார்த்தன் பள்ளி பாடு வாளே என்று பன்னியுரைக்கின்றாள்; ஒவ்வொரு பாசுரத் திலும் ஒவ்வொரு வகையாகக் கூறுகின்றாள்.

கவன யானை கொம்பொசித்த

கண்ணனென்றும், காமருசீர் குவளைமேகம் அன்னமேனி

கொண்டகோன் என்னாணை யென்றும், தவளமாட நீடு நாங்கைத்

தாமரையாள் கேள்வனென்னும் பவளவாயாள் என்மடந்தை

பார்த்தான்.பள்ளி பாடுவாளே (1)

(ஒசித்த-முறித்தொழித்த குவளை-கருநெய்தல்பூ: மேனி-உடல்; தவளம்-வெண்மையான!

2. விளக்கம் மேலும் வேண்டுவோர் பெரி. திரு.

3. 7: திவ்வியார்த் தீயிகை காண்க.