பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxix

பெற்றவர்கள். இவருடைய ஆணித் தரமான பேச்சில் இவருடைய உயிர் நாடி பேசும். 'நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று பாடும் மனமுடைய பக்தர்.' இவர்: சீலம் நிறைந்த பண்புடைச் செல்வர். "உயர் திணை என்பனார் மக்கட்புட்டே' என்ற தொல் காப்பியக் கருத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழும் உயர் குணச் செம்மல். இறையன் பிலும் மெய்ப்பொருள் கருத்து களிலும் ஆழங்கால் பட்டு நிற்கும் இப்பெரியாருக்கு இந்தப் பக்திப் படையலைச் செய்து பெரும் பேறு பெற்ற வனாகின்றேன். இவர் ஆசியால் இன்னும் பல பக்திப் பனுவல்களைப் படைக்கும் ஆற்றலைப் பெறுவேன் என்பது என் அதிராத நம்பிக்கை.

இந்த நூலை எழுதவும், அது அச்சேறி வெளிவரவும் அருள் புரிந்து அடியேனின் இதயத்தில் நிரந்தரமாக எழுத் தருளி அடியேனைந் தீதில் நன்னெறி'யில் இயக்கி வரும் 'மின்னு மாமுகில் மேவு தண் திருவேங்கடமலை கோவில் மேவிய விளக்கினை மனம் மொழிமெய்களால் வாழ்த்தி வணங்கிச் சரண் அடைகின்றேன்.

வந்தாய்; என் மனம்

புகுந்தாய்; மன்னிநின்றாய்;

நந்தாத கொழுஞ்சுடரே!

எங்கள் நம்பீ!

8. திருப்புல்லாணி-A, 9. தொல்-சொல்-நூற்பா.