பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37th பரகாலன் பைந்தமிழ்

நினைக்க வில்லை என்று தோற்றக் கூடியதாதலாலும் பரம பதநாதன் புறப்பட்டு வருகையில் திருமலையில் நின்று கோயிலிலே வந்து சாய்ந்தான் என்று நிர்வகிப்பதில் பொருத்தம் நன்குள்ளது. ஆகவே திருவரங்கத்திற்கும் மூலகந்தம் திருமலையாதலால் இப்போது திருவரங்கத் திலே ஆழ்வாருக்குண்டான பிராவண்யாதிசயம் அதற்கு வேர்ப்பற்றான திருமலையளவும் சென்றதனால் வேங் கடமே வேங்கடமே! என்றது பொருத்தமாக அமைகின்ற தன்றோ? பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியானத் திலும் இதே கருத்து ஆலமர் வித்தாகக் காணப்படு கின்றது.

வெருவாதாள் வாய்வெருவி: சிறிதும் அஞ்சாமல் வேங்கடமே வேங்கடமே என்று வாய் பிதற்றுகின்றாள்; கணவனது ஊரின் பெயரை வாய்விட்டுச் சொல்வதற்குக் ஆசப் படவேண்டியிருக்க, இவள் கூசாமல் சொல்லுகின் நானே! "இஃது என்ன சாகசம்!!’ என்கை. மலையைச் சொல்லுகின்றாளேயன்றி மலையன்வரை செல்ல முடிய வில்ல்ை. மலையையே பலகாலும் சொல்லிக் கதறுகின் றாள். ஆல் - இந்த இடைச் சொல் பெண் பிள்ளை யினுடைய வாய் வெருவுதலின் இனிமையைக் காட்டு கின்றது என்பர் அண்ணாசாமி,

இவ்விடத்தில் ஒர் ஐதிகம்: பட்டர் அடிக்கடி அழகிய மணவாளப் பெருமான்' என்றும், அனந்தாழ்வான் திரு வேங்கடமுடையான் என்றும் அநுசந்தித்துக் கொண்டி ருப்பார்கள். அவ் வநுசந்தானத்தில் அவர்களுடைய ஊற்றம் எல்லாம் நன்கு விளங்கா நிற்கும். அதுபோலவே பரகால நாயகியின் வேங்கடமே, வேங்கடமே என்ற அதுசந்தர்னத்திலும் மிகச் சிறப்பான இன்பம் பெர்லிய நிற்கும் என்பது ஆல் - என்பதில் தோன்றும். < νw.