பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 பரகாலன் பைந்தமிழ்

ml-l്il

பெளவம் கொண்ட திருவாளன் என் மகனை , தன்னுடைய எழிலார்ந்த வடிவைக் காட்டி முன்பு திருப் பாற்கடலில நின்றும் என் பெண் பிள்ளையைக் (இலக்குமி, கொள்ளை கொண்டான். இன்று சமுசாரக் கடலில் நின்றும் என் பெண்பிள்ளையைக் (பரகாலநாயகி) கொள்ளை கொண்டான். எப்போதும் இவனுக்குப் பெண்பிள்ளைக் கொள்ளை கொள்வதே செயல்முறை {modus operandi) Gumt gyjú!

'இப்போது இப்பெண் தாயின் வசத்தில்தானே இருக் கின்றாள். கொள்ளை கொண்டதாக எப்படிச் சொல்ல லாம்?' என்ற வினா எழுகின்றது. முன்னர்க் கூறிய நிலை மைகளை விளைவித்தலைவிட கொள்ளை கொள்வ தென்பது வேறொன்றுதுண்டோ? சம்சாரத்துக்கு ஆளா காதபடி செய்ததே கொள்ளை கொண்டது என்பது!

எங்ங்னம் நான் சிந்திக்கேனே: எம்பெருமானு டைய சுவீகாரத்திற்கு இவள் இலக்காகப் பெற்ற பெருமை ஒருவரால் இன்னவிதம்தான் என்று சிந்திக்கக் கூடியதோ? நெடுநாளாக நடந்து வருகின்ற சமுசாரத்தில் இன்று இப் படிப் பட்ட பகவத் விஷயீகாரம் வாய்த்ததென்றால் இதற்குக் காரணம் அந்தப் பகவானும் அறியான், இப் பெண்ணும் அறியாள்; கரையிலே நிற்கின்ற நான் எங்ங் னம் அறிவேன்?’ என்கின்றார் திருத்தாயார்.

5. சிலையிலங்கு பொன்னாழி(8.1): திருக்கண்ண மங்கை திருமொழியில் (7.10) எம்பெருமான் ஆழ்வாருக் குத் தன்னுடைய படிகளையெல்லாம் காட்டிக் கொடுக்க, அங்கு இனிய பாசுரங்களினால் வாயாரப் பேசி அநுபவித் தவருக்கு எம்பெருமானுடன் உடலுறவு கொள்ள வேண் டும் என்ற ஆசை கிளர்ந்தது: தம் நிலைமாறிப் பிராட்டி தசையை அடைந்து உடலுறவு பெறாமையாலே தம் ஆற்றாமையைத் திருத்தாயார் வாயாலே பேச வேண்டும்