பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 373

படியான நிலைமை நேர்ந்தது. பரகாலநாயகி காதல் நோயால் பலவற்றையும் சொல்லி வாய்வெருவுதலைக் கேட்ட திருத்தாயார் இப்போது இவளுடைய பேச்சு களின் நிலையை (சந்நிவேசத்தை) ஆராய்ந்தால் இவள் பரத்துவத்தில் ஈடுபட்டிருக்க மாட்டாள்; வியூக மூர்த்தி யையோ அந்தர்யாமித்துவ மூர்த்தியையோ சிந்தித்திருக்க மாட்டாள்; அர்ச்சாவதாரங்களில் திருக்கண்ணபுரத் தெம் பெருமானிடம்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் இல்லை யாகில் இப்படிப்பட்டவாய் வெருவுதல் இவளுக்கு ஏற்பட் டிருக்க முடியாது’ என்று நெஞ்சிற் கொண்டு - தம் மகள் நிலையை வினவ வந்தவர்களை நோக்கி, ‘என் மகளின் பேச்சுகளை நோக்கின அளவில் இவள் கண்ணபுரத் தம்மானைக் கண்டவளாயிருக்க வேண்டும்’ என்று சொல் லுகின்ற போக்கில் இத்திரு மொழி அமைந்துள்ளது.

சிலையிலங்கு பொன்னாழி திண்படை தண்டு)

ஒண்சங்கம்’ என்கின் நாளால்

"மலையிலங்கு தோள் நான்கே மற்றவனுக்கு

எற்றே கான்!” என்கின் நாளால்

முலையிலங்கு பூம்பயலை முன்போட,

அன்போடி, இருக்கின்றாளால்,

கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத்

தம்மானைக் கண்டாள் கொலோ? (1)

(சிலை-விய்; ஆழி-சக்கரம்; தண்டு-கதை ஒண் சங்கு.அழகிய சங்கு எற்றே-எப்படி, பயலைபசலை; முன்பு ஒட-முன்னே சென்று வழி காட்ட அன்பு ஒடி-அன்பு பின் செல்ல; அம்மான் -செளரிராஜன்! என்பது முதற் பாசுரம். தன் அருமை மகள் சொன்ன சொற்கள் தனக்கு மிகவும் சுவையாக இருந்தபடியால் அவற்றைத் தன் வாயாலும் பேசி யதுபவிக்கின்றாள் திருத்தாயார்.