பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

7

4

பரகாலன் பைந்தமிழ்

---,

'என் மகள் எம்பெருமானுடைய திவ்வியாபரணங் களைக் கண்டுகந்து அவற்றையே வாய் வெருவுகின்றாள்; சிலை என்கின்றாள்; இலங்கு பொன்னாழி என்கின்றாள்; தண்டு என்கின்றாள்; சங்கு என்கின்றாள்; அவனுக்கு மலை போன்ற நான்கு திருத்தோள்கள் உண்டு என்கின் றாள்; அவற்றின் அழகை என் சொல்வேன் என்கின்றாள்; நாயகன் மீது அன்பு உண்டான பின்பு முலையில் பசலை நிறம் தோன்றுவது இயல்பு. ஆனால் இவளிடம் முன்பு பசலை நிறம் உண்டாகவும் பின்பு அன்பு விளையவும் நேர்ந்திருக்கின்றன. இப்படிப்பட்ட இவளது தன்மையை நோக்கினால் இவள் கண்ணபுரத்து எம்பெருமானைக் கண்டவளாக இருக்க வேண்டும்' என்கின்றாள் திருத் தாயார்.

6. தெள்ளியீர் தேவர்க்கும் (8.2), மேலே குறிப் பிட்ட தாய்ப்பாசுரம் இத்திருமொழியாகவும் தொடர்ந்து வருகின்றது. இங்குத் திருத்தாயார் கண்ணபுரத் தெம் பெருமானையே நேராக நோக்கித் தன் பரிதாபத்தைப் பேசுகின்தாள். இத்திருமொழியில் சில பாசுரங்களில் தான் நொந்து கொண்டு பேசுவனவாகவும் செல்லும், ஆழ்வார்நாயகி செளரிராஜப் பெருமானிடம் தனக்குண் டான அளவு கடந்த ஈடுபாட்டையும் (பிராவண்யத்தை யும்) அவனைப் பிரிந்து தன் மேனி மெலிந்த படி யையும் பேசுகின்றாள். பேசுகின்றபடியைக் கூறுவது இங்ங்ணம்,

கண்ணனூர் கண்ண புரந்தொழும் காரிகை பெண்மை என்? தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள் வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள் வண்ணமும் பொன்னிறம் ஆவ தொழியுமோ (5)

(காரிகை-அழகிய பெண்; பெண்மை - பெண் ணர்மை; ஆப்புண்ட-கட்டுண்ட வண்ணம்