பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 பரகாலன் பைந்தமிழ்

தண்கோவலுர்பாடி_ :பாவருந் தமிழால் பேர்பெறு பனுவல் பாவலர் பாதிநாள் இரவில், மூவரும் நெருக்கி மொழி விளக்கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு' என்று வில்லிபுத்துாராழ்வாரின் திருக்குமாரரான வரந் தருவார் புகழ்ந்து கூறும்படியான முதலாழ்வர்கள் (பொய்கையார், பூதத்தார். பேயார்) மூவரும் பகவத் சொரூபத்தை நன்கறிந்து அநுபவித்து ஆநந்தப் பெருக் கெய்தின வரலாற்றை நெஞ்சிற்கொண்டு திருக்கோவலூ ரைப் பாடினாள் என்க. இவ்விடத்து இன்சுவை மிக்க வியாக்கியான வாக்கியம் காண்மின்: "ஆச்ரிதர் வந்து கிட்டினால் பின்னே அவர்களோடு முறையழியப் பரிமாறு கையன்றியே தானே மேல் விழுந்து சமஸ்லேஷத்த இட மாயிற்று திருக்கோவலூராகிறது. அவர்கள் மழை கண்டு ஒதுங்க அவர்களிருந்த விடத்திலே தானே சென்று தன்னை அவர்கள் நெருக்கத்தான் அவர்களை நெருக்க இப்படிப் பரிமாறி அவர்கள் போன விடத்திலும் அவ்விடத்திலே நிற்கிறானிறே வாசல் கடை கழியாவுள் புகா'(மு.திரு.86) என்று.

திருத்தண்காலையும் திருக்குடந்தையையும் : سة في திருக்கோவலூரையும் வாயாரப் பாடினவிடத்திலும் மன நிறைவு பெறாமையாலே ஆடவும் தொடங்கினாள். இப்படி இவள் ஆடுகின்றபடியைக் கண்டும் பாடுகின்ற படிக் கேட்டும் அன்னை "நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை?” என்றாள்; அதாவது: சேத நலாபம் ஈசுவர னுக்குப் புருஷார்த்தமேயன்றி ஈசுவரலாபம் சேதநனுக்குப் புருஷார்த்தமன்றே; அவனுடைய பேற்றுக்கு அவன் தானேயன்றோ பதற வேண்டும்? நீ இங்ங்னம் பதற லாமா?' என்றாள். இதனைச் சொன்ன தனையே ஏது வாகப் பரகாநாயகி நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே? .