பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகன் பாசுரங்கள்

تیمR:

§

7

திருப்பதியில் ஆழ்வார்க்குப் பரம போக்கியமான சேவை சாதித்தான் உருவெளித் தோற்றத்தில்; ஆழ்வாரும் பரகாலநாயகியின் நிலையிலேயே நின்று அப்பெரு மானைச் சேவித்தார். என்றைக்கும் எங்கும் கண்டறி யாத திருக்கோலமாக இருந்தது. அதனை மகள் பாசுர மாகக் கூறுவது இத் திருமொழி.

காதல் வெறி எத்தனையோ விதமாக உருவெடுக்கும். காரணமின்றி மகிழ்ச்சியும் எக்களிப்பும் உண்டாகும். துயரமும் துன்பமும் தலைக்காட்டும்; ஆறுதலும் ஆதர மும் தோன்றும், இன்னும் என்னென்னமோ செய்யும். கள்வெறியைவிடக் காதல் வெறி உறைப்புடையது; ஆற்ற லுடையது. காதல் வெறி இராவணனையும் சூர்ப்பண கையையும் படுத் திய பாட்டைக் கம்பராமாயணம் படித் தோர் நன்கு அறிவர். இருவர் முறையே ஒரு துணைச் சீதையாகவும் இராமனாகவும் காணும் காட்சியை மிகவும் அற்புதம் க, நகைச்சுவை தோன்றும் பாணியில், சித்தி சித்திருக்கும் கம்பனின் கவித்திறமையை எவரும் மறத்தல் முடியாது. காதல் வெறியைப் போன்றதே பக்தி வெறியும். பக்தியுணர்ச்சி முற்றிய நிலையில் அதன் விளைவு தனிச் சிறப்புடையது. அந்திலயில் உருவெளித் தோற்றமாக அது செயல் புரிவதை ஆழ்வார் பெருமக்கள் அற்புதமாகக் காட்டியுள்ளனர். உருவெளித் தோற்றம் (Haliucination) என்பது என்ன? ஒரு பொருளைப்பற்றி இடைவிடாது நினைக்கின்ற முதிர்ச்சியில் நினைக்கப் பெற்ற பொருளின் உருவம் போலியாகக் கண்ணுக் கெதிரில் தோன்றுவதே உருவெளித் தோற்றம் என்பது. இந்த உருவெளித்தோற்றம் அன்பினாலும் நிகழும்; அச்சத்தினாலும் உண்டாகும். சூர்ப்பனகையினால் சீதாப்பிராட்டியின் அழகை விரிவிாகக் கேட்டறிந்த இராவணன் அச்சீதையை இடைவிடாது நினைத்த கார

4. கம்பரா. ஆரணிய-மாரீசன்பதை 148, 149.