பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 பரகாலன் பைந்தமிழ்

ணத்தால் தூண் ஒரு பெண்ணுருவமாகக் உருவெளித் தோற்றமாகக் காணப்பட்டது. அங்ங்ணமே இராமனது அழகினில் ஈடுபட்டு அவனை அணைய வேண்டும் என்று எண்ணிய சூர்ப்பனகைக்கும் ஒர் ஆணுருவமாகத் துரண் காணப்பட்டது. இவை இரண்டும் அன்பினால் நிகழ்ந் தவை. இராவணன், தான் சீதையைக் கவரும் பொருட் டுத் தனக்கு உதவியாக, மாரீசனைப் பொன்மானாகச் செல்லுமாறு ஏவியபோது, மாரீசன் இருமுறை இராம னால் 'சூடு கண்ட பூனை'யாதலின், பார்த்தவிடமெங் கும் தனக்கு இராமனுருவம் தோன்றுவதாகக் கூறியது அச்சத்தால் நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். இத்தகைய உரு வெளித் தோற்றத்தைத் தொல்காப்பியரும் நோக்குவன எல்லாம் அவையே போறல்' என்று ஒரு காதல் துறையாக வகுத்துக் காட்டுவர்.

அட்ட புயகரத்து எம்பெருமானைச் சேவித்த பரகால நாயகி கூறுகின்றாள்:

செம்பொன் இலங்கு வலங்கை வாளி

திண்சிலை தண்டொரு சங்கம் ஒள்வாள் உம்பர் இருசுடர் ஆழி யோடு

கேடகம் ஒண்மலர் பற்றி, எற்றே! வெம்பு சினத்து அடல்வேழம் வீழ,

வெண்மருப்பு ஒன்று பறித்து, இருண்ட அம்புதம் போன்றவர் ஆர்கொல்! என்ன அட்ட புயகரத் தேன்.என் றாரே (3)

(இலங்கு-விளங்குகின்ற; வாளி-அம்பு; சிலைவில்; வாள்-கத்தி, பற்றி-தரித்துக்கொண்டு; வெம்பு-சினம் மிக்க கோபம்; மருப்பு-தந்தம்: அம்புதம்-மேகம்)

என்பது மூன்றாவது பாசுரம். யாரோ பெரியவர் ஒருவர் சேவை சாதித்தார். பஞ்சாயுதங்களோடு கூடி, கண்ண