பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

teகள் டாசுரங்கன் 哥&尊

பிரானுடைய சிறுச்சேவகமும் திருமேனியழகும் தோன்று: மாறு சேவை சாதித்த படியை அநுபவித்துப் பேசுகின் றாள் ஆழ்வார் தாயகி. "எதிரிகளை வெல்வதற்கும் என் னைப் போன்ற சிறுமிகளை வசப்படுத்திக் கொள்வதற்கும் உறுப்பாக திவ்வியயாயுதங்களை அணித்து கொண்டு வந்தார்' என்கின்றாள். ஓர் ஆபரணமும் இல்லா திருந்தாலும் திவ்விய சுந்தரமாய்த் திகழ்கின்ற திருக் கையிலே திவ்வியாயுதங்களையும் ஏந்திக்கொண்டுவந்து நின்றார் என்கின்றான். அட்ட புயனாகையாலே எட்டுத் திருக்கைகளிலும் எட்டுப் பொருள்களைத் தரித்துக் கொண்டு வந்தமையைக் குறிப்பிடுகின்றன முன்னிரண்டு அடிகள்.

எதிரே வந்து தோற்றினவருடைய சொரூ. சுபாவங் கள் ஆழ்வாருக்குத் தெரியாதிருந்தால் இவர் யார் கொல்? என்று வினவலாம். செம்பொன் இலங்கு'என் து தொடங்கி இருண்ட அம்புதம் போன்றவர்’ என்ற வரை மூன்றரை அடிகளால் அவருடைய சொரூபகபாவங் கலைச் சொல்வி வைத்து, இவர் ஆர்கொல்?’ எல் து வினவுவது பொருந்துமோ? எனின்: 'அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க வொண்ணாதபடி யிறே விஷய ஸ்வபாவம்' என்ற பெரியவாச்சான் பிள்ளை யின் வியாக்கியான சூக்தியில் விடைகாணலாம். அசாதா ரண இலட்சணங்களைத் தெரிந்து கொண்டபின் இன்னா ரென்றறியாமை என்று ஒன்று உண்டோ? என்று பலர்க் கும் நெஞ்சில் கலக்கமாகவே இருக்கும். ஆழ்வாருடைய நிலைமை வாய்த்தாலன்றித் தெளிவு பிறவாது; என் செய் வோம்? எதிரே வந்து தோன்றுகின்ற இவருடைய இலட் சணங்களைப் பார்த்தால் இவர் எம்பெருமானாயிருக்கக் கூடும்' என்று நினைக்க முடிகின்றது. ஆனால் நற்பேறு அற்றவர்களான நமக்கு அவர் இவ்வளவு எளிதாகச்சேவை சாதிக்க பிராப்தி இருக்க மாட்டாதே’ என்று நம்முடைய