பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 பரகாலன் பைந்தமி ழ்

గాజు,

திலே சத்தியேசன்" என்று பெயர் படைத்திருப்பது எதற்காக? நான் ஒருத்தி வாழும்படி காரியம் செய்ய மாட்டாத உனக்கு இப்புகழ் எல்லாம் பொருந்துமோ? என்கின்றாள்.

3. கரைவெடுத்த சுரிசங்கும் (8. 3) : திருமொழி 8. 1, 8. 2 ஆகிய இரண்டும் திருக்கண்ணபுரத்து எம் பெருமான்மீது எழுந்த தாய்ப்டாசுரங்கள்; தம் மகள் கண்ணபுரத்தெம்பெருமானை சம்லேவிக்க(புணரர்விரும்பி அது நிறைவேறாமையால் அவள் வாய் வெருவுவதைக் கண்டு அதுபற்றித் திருத்தாயார் பேச்சாக வெளிவந்தது; கைவளை கொள்வது தக்கதே? (8. 2: 1) என்று திருத் தாயார் கண்ணபுரத்துச் செளரிராஜப் பெருமாளை நோக்கிக் கேட்ட தலைமகள் உணர்ந்து தன் கையை நோக்கினாள்; கைவளைகள் காணப்பெறவில்லை; "அந்தோ! வளை இழந்தேனே' என்று ஒருகால் சொன்னாற்போலே ஒன்பதின்காற் சொல்லிக் கதறுகின் றாள்.

கரைஎடுத்த சுரிசங்கும்

கணபவளத்து எழுகொடியும் திரைஎடுத்து வருபுனல்சூழ்

திருக்கண்ண புரத்து உறையும் விரைஎடுத்த துழாய் அலங்கல்

விறல்வரைத்தோள் புடைபெயர வரைஎடுத்த பெருமானுக்கு

இழந்தேன்.என் வரிவளையே (1)

(கரை - ஒலி; சுரி - வளைந்த; கனம் - செறிந் திருக்கின்ற; எழு - வளர்ச்சியையுடைய; திரை - அலை; புனல் - நீர்; விரை - வாசனை; அலங்கல்மாலை; வரை - மலை; வரிவளை - அழகிய வரிவளை :