பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 பரகாலன பைந்தமிழ்

கின்ற பேச்சைப் பார்த்தால் வேதம் ஒதும் வைதிக அந்: தணர்களுடன் ஒப்பிட்டுச் சொல்லலாம்; ஆகவே நல் வேதம் ஒதும் வேதியர்' என்று கூறலாம். எனவே, இன் னாரென்று அறுதியிட்டுச் சொல்ல முடிய வில்லையே தோழி' என்கின்றாள்.

தோழியானவள் தலைவியை நோக்கி, 'அஃது இருக் கட்டும். நீ அவரை ஏறிட்டு நோக்கினாயா? அவர் நின்னை நோக்கினது உண்டோ?’ என்று வினவ, அதற்கு அவள், கேளாய்; அதனையும் சொல்லுகின்றேன்" "என்னையும் நோக்கி, என் அல்குலும் நோக்கி ஏந்திளங் கொய்கையும் நோக்குகின்றார்’ என்கின்றாள். மர்மங். களில் கடாட்சியா நின்றார்; பார்த்த பார்வை ஒரு கால் மாற வைத்திலர்' என்பது பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்,

‘நம்மைப் பாங்காக அநுபவிப்பதற்குறுப்பான பக்தி இல்வாழ்வார்க்கு முதிர்ந்ததோ? என்று எம்பெருமான் ஆராய்ந்ததாகச் சொல்லியதாக இதனைக் கொள்ள வேண்டும். போகத்திற்குக் கொங்கை முதலிய உறுப்புகள் எப்படி இன்றியமையாதனவோ அப்படியே பகவதநுபவத். திற்குப் பரபக்தி, பரஞானம், பரமபக்தி நிலைகள் இன்றி யமையாதனவாதலால் உள்ளுறையில் - அவற்றைப் பொருளாகக் கொள்ளல் வேண்டும். $

"அவர் நின்னை நோக்கின போது நீ செய்ததென்? என்று தோழிவினவ, அன்னை என்னை நோக்கும் என்று அஞ்சுகின்றேன்' என்கின்றாள் தலைவி. அவர் பார்த்த பார்வையெல்லாம் எனக்குப் பெருமகிழ்ச்சியாக இருந்தது; ஆனால் இந்த நிலைமையை நம் தாய் காண்பாளாகில் என்ன பாடு படுத்துவளோ? என்று அஞ்சி நிற்பதே என் கருமமாயிற்று' என்கின்றாள். நான் பதறி மேல் விழு வேன்; இதனைத்தாய் நோக்கினாலாகில் என்னாகுமோ? என்று அஞ்சி ஒழிந்தேன்' என்பது குறிப்பு.