பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந் தமிழ்

4

Ö

3.

தும் ஆணும் பெண்ணும் வாயலகுகளைக் கோத்துக் கொண்டு இணை பிரியாது நிற்கும்; கணப்பொழுது ஒன்றை விட்டுப் பிரிந்தாலும் - வாயலகுகள் நெகிழ்ந்து விடுபட்டுப் பிரிந்தாலும், அப்பிரிவுத் துயரைப் பொறா மல் ஒன்றையொன்று ஒன்றிரண்டு முறை குரலெடுத்துக் கூவி அதன் பின்பும் தனதுணையைக் கூடாவிடில் இறந்து படும்; இப் பறவையை வட நு, லார் கிரெளஞ் சம்’ என்பர் ஆனும் பெண்ணுமான அந்த அன்றிற் பறவை இணை பிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்தில் வாயலகு தானாக நெகிழ்ந்தால் உடனே துயிலுணர்ந்து அந்த நெகிழ்ச்சியையும் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாகக் கூவுகின்ற மிக இரங்கத் தக்க சிறுகுரல் காதலர்களிடம் பரிவுத் துயரை வளர்த்து

அவர்களை மிகவும் வருத்துவதாகக் கூறுவர். இந்த

ஆழ்வார்,

முன்னிய பெண்ணைமேல்

முள்முளரிக் கூட்டகத்து பின்னும் அவ்வன்றில்

பெடைவாய்ச் சிறுகுரலும் என்னுடைம நெஞ்சுக்குஓர்

ஈர்வாளாம்

-பெரி. திருமடல். 46

என்று பெரிய திருமடலிலும் குறிப்பிடுவர்.

7. தவள இளம் பிறை (9. 5) : திருப்புல்லாவி, யில் இருந்த நாயகிபாவனை திருக்குறுங்குடியிலும் தொடர்கின்றது. திருப்புல்லாணியிலிருந்த நெஞ்சு திருக்குறுங்குடிக்குச் சென்றதேயன்றி, ஆற்றாமையில், உடல் அங்குச் செல்லவில்லை. கால் நடை தாராமையால் அங்குச் செல்ல முடியவில்லை; பாதகப் பொருள்கட்கு