பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 4 05

அருகில் வருமாறு அழைத்து எம்பெருமான் இங்கே வந்து சேரும் படியாகக் கூவ வேண்டும் என்று வேண்டிக் கொள் ளுவதாக அமைந்தது இத்திருமொழி.

கோழி கூ என்னுமால்; தோழி! நான் என் செய்கேன்? ஆழிவண்ணர் வரும்பொழுது ஆயிற்று கோழி கூ என்னுமால் 6)

(ஆல்-மகிழ்ச்சி, ஆல்-கஷ்டம்)

கண்ணபிரான் முதலில் சாமக் கோழி கூவினதும் தான் குறித்த பெண்ணுடன் கலவி செய்யச் சென்று, மீண்டும் அக்கோழி கூவினதும் அவளை விட்டுப் பிரிவது என்ற ஒரு நியதி உண்டு. இந்த நியதியை அறிந்த பர கால நாயகி தன் தோழியை நோக்கி கோழி கூவென்னு மால் ஆழிவண்ணர் வரும் பொழுதாயிற்று' என்றாள்; கோழியானது கூ என்று கூவா நின்றபடியால் கடல் வண்ணனான கண்ணபிரான் என்னோடு கலவி செய்தற்கு வருங்காலமாயிற்று என்று மகிழ்ந்து சொன்னபடி. பல பல ஊழிகளாயிடும்; அன்றியோர் நாழிகையைப் பல பல கூறிட்ட கூறாயிடும் (திருவிருத் 16) என்று பராங்குச நாயகி கூறுகிறபடி பிரிவுக் காலம் அநேக சுல்பங்களாவும் கலவிக்காலம் மிகக் குறுகிய காலமாகவும் தோற்றுவது இயல் பாதலால் இவள் கிருட்டிணனோடு கலவி நிகழ்ந்து முடிவதாகக் கொண்டு வருந்தித் தோழி! நான் என் செய்கேன்! கோழி கூ வென்னுமால்' என்கின்றாள். "ஐயோ தோழி! நான் என் செய்வது மறுபடியும் கோழி கூ வென்னப் போகிறதே! கோழி கூவினால் கண்ணன் ஒடிப் போய் விடுவானே!" என்றபடி.

இப்பாசுரத்தின் பெரியவாச்சான் பிள்ளை வியாக் கியானத்தில்- கிருஷ்ணன் கோழியை மடியிலே இட்டுக் கொண்டு வரும்போலே காணும்' என்று பட்டர் அருளிச்