பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பரகாலன் பைந்தமிழ்

செய்தாரென்று பிரசித்தமிறே” என்ற குச்தி குறிக்கொள் ளத் தக்கது. கலவிக் காலத்தைச் சூசிப்பிக்கின்ற கோழி யும் பிரிவுக் காலத்தைச் சூகிப்பிக்கின்ற கோழியும் இப்பாசுரத்தில் ஒருங்கே குறிப்பிட்டபடியால் பட் டர் இவ்வாறு இரசோக்தியாக அருளிச் செய்தார் எனக் கொள்ளலாம்.

9. குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி (11. 4): இது வும் பிராட்டி பாசுரத்தாலே தம்முடைய பிரிவுத் துன் பத்தை விளங்கக் காட்டுகின்றார். 'இராம கிருஷ்ணாதி அவதாரங்களாலேயே பல படியாலும் உலகத்தை வாழ் வித்த பெருமான் நம்மை இப்பாடுபடுத்துகின்றானே!" என்கின்றாள்.

கெண்டை ஒண்கனும் துயிலும் என்நிறம் உண்டு பண்டுபோல் ஒக்கும்; மிக்கசீர்த் தொண்டர் இட்டபூந் துளவின் வாசமே வண்டு கொண்டுவந்து ஊது மாகிலே (9)

(இட்ட-சமர்ப்பித்த, கெண்டை-ஒருவகை மீன்;

ஒள்கண்-அழகியகண்.1

என்பது இத்திருமொழியில் ஒன்பதாம் பாசுரம். 'எம் பெருமான் திருவடி இணைகளிலே பரம பாகவதர்கள் சமர்ப்பித்திருந்த திருத்துழாய் மலர்களின் பரிமளத்தைக் கொய்து கொண்டு வந்து வண்டு ஊதுமாகில் என்னு டைய கண்களும் துயில் கொள்ளும்; என்னுடைய மேனி யும் பழைய நிறம் பெறும்' என்கின்றாள்.

என் நிறம் பண்டு பண்டு போலாக்கும். இதற்கு ஒரு சிறப்புப் பொருள் உண்டு. இப்போதைய என் நிலைக்கு முற்பட்டதான ஒரு நிலையுண்டோ, அதற்கும் முற்பட்ட தான ஒரு நிலையுண்டோ அந்நிலையில் நான் எப்படி இருந்தேனோ அப்படி ஆவேன்' என்றபடி.