பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 பரகாலன் பைந்தமிழ்

بیعیحیی متعسجی

10. குன்றமெடுத்து மழைதடுத்து (11, 2): இத்திரு மொழியும் நாயகி சமாதியால் அமைந்தது. பிரிவுத் துன்பம் மீதுர்ந்து அன்றில் தென்றல் முதலிய பொருள் களும் நோவுபடுத்துகிற படியை பன்னியுரைப்பது இதுவும்.

அன்னை முனிவதும்

அன்றிலின்குரல் ஈர்வதும் மன்னும் மறிகடல்

ஆர்ப்பதும் வளைசோர்வதும் பொன்னங் கலைஅல்குல்

அன்னமென்னடைப் பூங்குழல் பின்னை மணாளர் திறத்தம்

ஆயின. பின்னையே (5)

(முனிவதும் - சீறிச் சொல்வதும்; ஈர்வது . இம்சிப்பது; சோர்வது - கழல்வது; பின்னை - நப்பின்னைப் பிராட்டியார்!

என்பது இத்திருமொழியில் ஐந்தாம் பாசுரம் : நான் பகவத் விஷயத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் அன்னை என்னை ஒருவார்த்தையும் பொடிந்து சொன்னதில்லை. அன்றிற் பறவையின் குரல் முன்பு கேட்கப்படும் போது செவிக்கு மிக இனிதாக இருந்தது; அப்போது கடல் ஒலியும் காது கொடுத்து கேட்கும்படியிருந்தது; உடலும் பூரித்து வளைகள் நெருக்குண்டிருந்தன. இப்போது அநுபவிக்கின்ற தொல்லைகளை முன்பு நான் அநுப வித்ததே இல்லை; பின்னைப் பிராட்டியாரின் மணாள ரான எம்பெருமானிடம் நெஞ்சு செலுத்தப்பெற்ற பின்பே அன்னை சீறிச் சொல்லும் படியாகவும் அன்றிலின் குரலால் நலியும் படியாகவும், கடலொலிக்கு நோவுபடும் படியாகவும் கைவளையல்கள் கழலும் படியாகவும் நேரிட்டது' என்கின்றாள்.