பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 4.1.1

اهمیت مستمبی تبعید

கின்றாள். முன்னடிகளில் பணப் பையில் ஏராளமான பணம் இருந்தும் புறங்கால் வீங்குவாரைப் போலாயிற்று இந்த நாயகியின் நிலையும். சங்கு சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களுமாய்’க் கண்ணெதிரில் வந்தருளி சேவை சாதியாமல் உள்ளே உறைந்து மறைந்து கிடப்பதனால் என்ன பயன்’ என நினைத்திருக்கின்றாள் போலும் .

பெண்ணானோம் பெண்மையோம் : பெண்ணாய்ப் பிறந்த நாம் பெண்மையை நன்கு காப்பாற்றிக் கொண்டோமானோம். கண்ணன் மனத்துள்ளே இருக்க வும் கைவளை கழலப்பெறுகின்ற நமக்கும் பெண்மைக் கும் வெகுதூரம் உண்டு என்றபடி. கிற்க: இஃது ஒரு புறம் இருக்கட்டும்; "குளிரருவி வேங்கடத் தென்குணம் பாடி அளியத்தக்க மேகங்காள்! ஆவிகாத்திருப்பேனே’’ (நாச்திரு. 8. 3.) என்றாற்போலே உள்ளவறையில் ஆவியைக் காத்திருப்பதற்காக அவன் விரும்பியுறையும் திவ்விய தேசங்களைப் பாடுகையில் ஒரு தடையுடையரா யிருந்தோமோ? கைவளையல்கள் கழன்றொழிந்தால் ஒழியட்டும்; பெண்மைக்குக் கேடு வந்தால் வரட்டும், அவன் விரும்பியுறையும் திருமலையையும் திருவரங்கத் தையும் பாடுவோம்' என்கின்றாள்.

12. மின்னிலங்கு திருவுருவும் (திருநெடுந் 25). திருநெடுந்தாண்டகத்தில் 21 முதல் 30 பாசுரங்கள் மகள் பாவனையில் அமைந்தவை. இவற்றில் தூது பாசுரங்க வளாக அமைந்தவை (26, 27) அடுத்த இயலில் விளக்கப் பெற்றுள்ளன. இவண் குறிப்பிட்டுள்ள பாசுரத்தில் பரகால நாயகி தலைவன் தன் பக்கத்திலுள்ள அனைத் தையும் காட்டி என் பக்கத்திலுள்ளவை அனைத்தையும் கொள்ளை கொண்டு போயினான்' என்கின்றாள்.