பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41% பரகாலன் பைந்தமிழ்

மின்இலங்கு திருவுருவும், பெரிய தோளும்,

கரிமுனிந்த கைத்தலமும், கண்ணும், வாயும், தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே

தாழ்ந்து இலங்கு மகரம்சேர் குழையும் காட்டி என்நலனும் என் நிறையும், என்சிந் தையும்

என்வளையும் கொண்டு என்னை ஆளும்கொண்டு பொன் அலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலினுாடே

புனல்அரங்கம் ஊர் என்று போயி னாரே (25)

(இலங்கு - விளங்குகின்ற; உரு - மேனி, கரி .

யானை (குவலயா பீடம்); முனிந்த - சிறிப் புடைத்த நலன் - அழகு நிறை - அடக்கம்; ஆள் - அடிமை, செருந்தி சுரபுன்னை)

என்பது பாசுரம். பாசுரத்தின் பொருள் நயம் பகவதது பவம் விளைவிக்கத் தக்கது.

மின்னிலங்கு திருவுருவும் : மின்போலே விளங்கா நின்றுள்ள திருமேனியை முதலில் காட்டினார்’ என்கின் றாள். கார் வண்ணந்திருமேனி (18) கருநீல வண்ணன் தன்னை' (3), முகிலுருவம் எம் அடிகள் உருவந்தானே' (2) என்றெலாம் சொன்ன ஆழ்வார் இங்கு மின் இலங்கு திருவுரு' என்றது என்? என்னில் : வள்ளல் தன்மைக்கும் விடாய் தீர்க்கும் தன்மைக்கும் மேகத்தை ஒப்புச் சொன் னார் அங்கெல்லாம்; எதிர்விழி விழிக்க வொண்ணாத படி யான தன்மையை நோக்கி இங்கு மின் இலங்கு திருஉரு' என்றார். ஆனாலும் காள மேகத்தின் நிறமன்றோ வடிவின் நிறம் என்னில்: திருவாழியாழ்வானுடைய புகர் திருமேனியெங்கும் பரவியிருக்கையாலே இவ்வாறு சொல் லக் குறை இல்லை. அருண கிரணத்தாலே மறைக்கப் பட்ட காளமேகம் எனவும் கொள்ளலாம். 'வடிவார் சோதி வலத்துறையும் சுடரொழி’ (1) என்ற திருப்பல் லாண்டும் நோக்கத் தக்கது. 'ஒரு கையில் சங்கு, ஒரு