பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 413

கை மற்று ஆழியேந்தி உலகுண்ட பெருவாயார்” (24) என்று சொன்னதும் நினைக்கத் தக்கது. இவ்வாறு பெரிய மேன்மையைக் காட்டிமை சொல்லிற்றாயிற்று.

பெரிய தோளும்: காலம் உள்ள அளவும் அநுபவித் தாலும் வேறொரு அவயவத்தில் போக வொண்ணாத படி துவக்கவல்ல அளவிறந்த போக்கியதை வாய்ந்தவை திருத்தோள்கள். தோள்கண்டார் தோள்கண்டார்' என் லும் படியானவை. தோள் நிழலிலே உலகம் அடங்கலும் ஒதுங்கினாலும் ஒதுங்கியவர்கள் சுருங்கி நிழலே மிக்கிருக் கும் படியான பெருமையைச் சொன்னதாகவும் கொள்ள 念a)、『リ) -

கரி முனக்த கைத்தலம்: கம்சனால் மதம் ஊட்டி நிறுத்தப்பெற்ற குவலயாபீடம் என்ற யானையைத் தொலைத்த மிடுக்கு விளங்க நின்ற திருக் கைகள். ஒரு சிறப்பும் வேண்டாது இயற்கையாகவே பரம போக்கிய மாக இருக்கும் கண்ணும் வாயும்.'

தன்னலர்ந்த கறுந்துழாய் முதலியவை. தன் நிலத்திற் காட்டிலும் செவ்விபெற்று நறுமணம் மிக்க திருத்துழாய், வலையத்தினருகே திருத்தோள் அளவும் தாழ்ந்து விளங்கு கின்ற மகர குண்டலங்கள்.

ஆக, இவற்றையெல்லாம் சேவை சாதிப்பித்தான். இவையெல்லாம் காட்சி அளவ்ே.

எம்பெருமான் கொண்டவற்றை இனிச் சொல்லு கின்றாள்.

என் நலனும்........ .என்னை ஆளுங்கொண்டு: "எல்லா வற்றையும் சுவாதீனம் பண்ணுபவர் போலே வந்து எல்லா வற்றையும் கொள்ளை கொண்டார்' என்கின்றாள். நலன்-நலம்; குணம் என்றபடி. நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்கின்ற ஆன்ம குணங்களையும் அழகு