பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 பரகாலன் பைந்தமிழ்

மென்மை முதலிய விக்கிரகக் குணங்களையும் சொன்ன படி. இவற்றைக் கொள்ளை கொண்டார் என்றது நிற வேறுபாட்டை விளைவித்து வாய் பிதற்றச் செய்தார் என்றபடி..

மூன்றாம் அடியில் என் நலனும் நிறையும், சிந்தை யும் வளையும் கொண்டு என்று சொல்லாமல் ஒவ்வொன் றிலும் என்' என்பதைச் சேர்த்துச் சொல்வதில் ஒரு சுவை. (சுவாரஸ்யம்) உண்டு. 'அவருடைய குணங்களை யும் அவருடைய ஆண்மையையும் அவருடைய நெஞ்சையும் அவருடைய ஆபரணங்களையும் கொள்ளை கொள்ளப் பிறந்தவள் நானாயிருக்க, என்னுடையவற்றை அவர்

கொள்ளை கொண்டது என்ன அற்புதம்! காண்மின்!” என்று எடுத்துக் காட்டுகிற படியாகும்.

என்னை ஆளுங்கொண்டு: ‘'என்னுடைய எல்லாச்

சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டு போனதுடன் அவற்றுைச் சுமந்து கொண்டு போவதற்கு ஆளாகவும்

என்னையே அமைத்துக் கொண்ட விந்தை என்னே!’

ன்ைகின்றாள். ஒருவருடைய வீட்டில் குந்து எல்லாப், பொருள்களும் கொள்ளை கொண்டு அவற்றை அந்த வீட்

டுக்குரியவருடைய தலையிலே வைத்து சுமக்கச் செய்து கொண்டு போமாப் போல-வடபுலத்தில் (இமயத்தில்). கண்ணகி சிலைக்குக் கல்லெடுத்து-கனக விசையர் தலை யிலே வைத்துச் சுமக்கச் செய்தது போலே-இருக்கின் றதே’ எள்கின்றாள்.

இங்ங்னம் மீண்டும் கொள்வதற்கு ஆதாரம் இருக்க வேண்டும் அல்லவா? முதலே போய்விட்டால் மீண்டும் கொள்ளையிடுவதற்கு இடமில்லாது போகுமே என்று 'உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயர்ப் பெய்து கூத்தாட்டுக் காணும்' என்றபடி போகிற உயிரையும் போகவொட்டாமல் நிறுத்தி வைத்திருப்பது மேன்மேலும்