பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. மகள் பாசுரங்கள் -

தூது பற்றியவை

தூது என்பது, ஒருவர் தம்முடைய கருத்தை இடை நின்ற ஒருவர் வாயிலாகக் கூறிவிடுப்பது. சங்க இலக்கி யங்களில் காமம் மிக்க கழிபடர் கிளவிகளாக இருந்த துறையே பிற்காலத்தில் தூது இலக்கியங்களாக வடிவு கொண்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து. பக்தி, இலக்கியங்கள் வளர்ந்த காலத்தில் ஆழ்வார் பெருமக்கள் இந்த அகத்துறையைப் பயன்படுத்திய அருமைப்பாட்டை ஈண்டுக் காண்போம், ஆழ்வார் திருமொழிகளில் அவர் கள் தாமான தன்மையைவிட்டுப் பிராட்டியாரின் நிலையை ஏறிட்டுக் கொண்டதாகப் பாசுரங்கள் அமைக்கப்பெற்றிருக்கும். பெரும்பாலும் ஆழ்வார்கள் புள்ளினங்களையே தூது போகும் படியாகப் பாசுரங்கள் அமைப்பர்; குருகினங்கள், நாரைகள், அன்னங்கள், பூங் குயில்கள், கிளி, மயில், பூவை, அன்றில்கள் வண்டினங் கள் முதலியவை தூதுவிடும் பொருள்களாக அமைந்திருப் பதைக் காணலாம் இவற்றைத் தவிர வாடை மேகம், நெஞ்சு போன்றவற்றையும் இவர்தம் பாசுரங்களில் தூதுப் பொருளாக அமைந்திருப்பதையும் கண்டு மகிழ லாம்.

இங்ங்ணம் பறவைகளைத் தூது லிடுவதற்கு உட் பொருள் உண்டு. ஆசாரிய ஹிருதயம்,