பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் - துாது பற்றியவை 419

வண்டுவிடு துனது:

துாவிரிய மலருழக்கித்

துணையோடும் பிரியாதே பூவிரிய மது நுகரும்

பொறிவரிய சிறுவண்டே! தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி ஏவரிவஞ் சிலையானுக்கு

என்நிலைமை கூறாயே

-பெரி. திரு. 3.6:1

|துர-சிறகு, உழக்கி-மிதித்து; பொறி-புள்ளி; வரி

இரேகை, ஏ-அம்பு; சிலை-வில்) இது பரகால நாயகி வயலாளி மணவாளனுக்கு ஒரு வண்டைத் தூது விடுவதாக அமைந்த பாசுரம்.

துணையோடும் பிரியாதே. அந்த வண்டு தன் பேடை யுடன் கலந்து மலரில் மதுபானம் பண்ணிக் கொண்டுள் ளது. நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமும் இல்லாமல் வருந்திக் கிடக்கும்போது நீ இப்படி உன் காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ?” என்ற கருத்து முன்னிரண்டு அடிகளில் வெளிவரும்.

பரகால நாயகியைப் போல் அவை விரக வேதனைப் படாமல் துணை பிரியாதிருப்பதனால் சிறகை விரிக்கவும், மலர்களிலே கால் பாவமும், மதுவைப் பருகவும், மேனி நிறம் பெற்றிருக்கவும் உள்ள நிலையைக் காண்கின்றாள். 'மலரைக் கண்டால் அருவருத்தும், போக்கியப் பொருள் களில் வெறுப்புற்றும் மேனி நிறம் அழிந்தும் இரா நின்ற என்னையும் உன்னைப் போலாக்க வேண்டாவோ? நானும் துணைவனோடு கலந்து வாழும் படி நீ செய லாற்ற வேண்டாவோ?' என்பது உள்ளுறை.