பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏多翰 பரகாலன் பைந்தமிழ்

'உளங்கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்' (4.3:9) எனப்பட்ட பகவத் விஷயமாகிய மதுவை விரும்பியும், ஆசாரிய சேவையாகிய மதுவைப் பருகுதலையே விரதமாக உடையதாயும் மேலே பறந்து செல்வதற்குச் சாதனமாகிய இரண்டு சிறகுகள் போன்ற கர்மஞானங்களை உடையராகியும் சாரத்தைக் கிரகிக்கும் இயல்புடையவர்களாகிய ரீவைணவர்களை வண்டாகச் சொல்லுவது வழக்கம். அப்படிப்பட்ட பூரீவைணவர் களை நோக்கி 'நீர் எம்பெருமான் திருவடிகளிலே புருஷ காரம் செய்து அடியேனையும் உம்மைப்போலே பகவ தநுபவமே நித்தியமாய்ச் செல்லுமாறு ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று பிரார்த்தித்தல் இதற்கு உள் ளுறைப் பொருள். வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிவது" (திரு வாய். 4.6:8) சம்பிரதாயமாகும்.

பின்னிரண்டு அடிகளால் தனக்காகச் செய்ய வேண் 母山 காரியத்தை நியமிக்கின்றாள். வயலாளி மணவாளனை நீ இங்கே அழைத்துக் கொண்டு வர வேண்டா. இன்னாள் இன்னபாடுபட்டுக் கொண்டிருக் கின்றாள்' என்ற ஒரு சொல் அவன் திருச்செவியில் விழ விட்டால் போதும்' என்கின்றாள். உரையாயே என்ற விடத்து பெரியவாச்சன் பிள்ளை வியாக்கியானம்: 'கொடுவர வேண்டா; அறிவிக்கு மித்தனையிறே இத் தலைக்கு வேண்டுவது வருகை அவன் பணியே; வாரா தொழியுமென்று ரட்சகனுக்குக் குறையாமே! நீங்களறி வித்த அநந்தரம் (உடனே) உங்கள் பேச்சுக் கேட்டுத் தானே வாரா நிற்கும்’ என்பது.

அடுத்த பாசுரமும் வண்டைத் துாதுவிடுவதாக அமைந்துள்ளது. இதன் பொருள்: 'மலரத் தொடங்கின நீல மலரிலே குடும்பத்தோடு சென்றிழிந்து மதுபானம் பண்ணாநிற்கின்ற வண்டே வயலாளி மணவாளன் என்