பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் தூது பற்றியவை 421

னோடு கலந்து பிரிந்து போனது முதலாக அவன் நினைத் திருப்பது இன்னதென்று தெரியவில்லை; என்னை மறந்து விட்டானோ? அன்றி என்னையே நினைந்து கொண்டு கிடக்கின்றானோ? இங்கே வருவதாக இருக்கின்றானோ? என்னை வரவழைத்துக் கொள்வதாக இருக்கின்றானோ? அன்றி நான் ஒருத்தி இருக்கின்றேன் என்பதைக் கணிசி யாமலே கிடக்கின்றானோ? இப்போது அவன் செய்வதும் செய்ய நினைப்பதும் ஒன்றும் எனக்குத் தெரியவில்லை; என்னைப் பிரிந்து அவன் வருத்தமற்றிருப்பது போலவே நானும் அவனைப் பிரிந்து வருத்தமற்றிருக்கின்றேன் என்று அப்பெருமான் நினைத்து ஆறியிருக்கவும் கூடும்; நான் இங்ங்னே நோவுபடுகின்றேன் என்பது தெரிந்தால் இங்கு வந்து சேரத் தாமதிக்க மாட்டானாதலால், நீ அங்குச் சென்று நான் படுகின்ற நோயைத் தெரிவிக்க வேண்டும்’ என்கின்றாள்.

இந்தப் பாசுரத்திலுள்ள அறுகால சிறுவண்டே' என் பதற்குப் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியான சூக்தி: 'இரண்டு காலுடையாரைப் போலன்றிக்கே ஆறுகாலுடையார்க்குக் கடுகப் போய்க் காரியம் தலைகட் டலாமிறே' என்பது. இது போலவே திருநெடுந்தாண்ட கத்தில் (26) அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை' என்றவிடத்து வியாக்கியான சக்கரவர்த்தியின் உரையில், "த்வி பாதத்தாயிருத்தல் சதுஷ் பாதத்தாயிருத்தல் செய்கை யன்றியே கமந சாதநமான கால்கள் ஆறு உண்டாகப் பெற்றேன் என்கின்றாள்' என்பது பூருவர்கள் நிர்வாகம்; வண்டுக்குக்கமநசாதநம் சிறகாகையாலும் என் தலையிலே வைக்கைக்கு ஆறு கால் உண்டாகப் பெற்றேன் என்கின் கின்றாள்' என்று பட்டர் அருளிச் செய்வர். அறிவுக் கூர்மையுள்ள பட்டரின் நிர்வாகத்திற்கு அதே அளவு அறிவுக் கூர்மையுள்ள பிரதிவாதி பயங்கரம் அண்ணங்க ராசாரிய சுவாமிகள் தரும் விளக்கம்: 'வண்டுக்கு ஆறு