பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

委24 பரகாலன் பைந்தமிழ்

வேள் என்னும் சிறு பயல் இம்சிக்கும் படியோ நம் கதி: என வருந்துகின்றாள்.

காமற்கு என்கடவேன்! கருமாமுகில் வண்ணற்கல்லால் பூமேல்ஜங் கணைகோத்துப் புகுந்து எய்ய காமற்கு என்கடவேன்? (10. 10: 7)

என்று பின்னரும் அருளிச் செய்வதைக் காணலாம். ஆசை அதிகரித்துச் செல்வதையும், அது கைகூடாமையால் கஷ்டம் மீதுார்ந்து செல்வதையும் காமனது இம்சையாகச் சொல்லுவது மரபு.

தேன்வாய வரிவண்டே! : “ஆபத்துக் காலத்தில் மதுரமான பேச்சுப் பேசுபவனன்றோ நீ? பிராட்டி அசோக வனத்திலே அசோக மரத்தில் மயிர்முடியைப் பிணைத்து உயிர் மாய்த்துக் கொள்ளப் புகுந்த சமயத்தில் ஒருவன் இனிமையான பேச்சுப் பேசி உயிர்விடாது செய்ததைப் போல உதவுபவனன்றோ? நீ என்று புகழ்ந்து கூறுகின்றபடி,

திருவாலி நகராளும் ஆனாயற்கு : இதற்குப் பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானம் : "திருவாய்ப் பாடியில் சம்பத்தோடே திருவாலியில் சம்பத்தையும் கையடைப்பாக்கினால், பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோவென்ன அவசரமுண்டோ?’ என்று இதன் சுவையை அநுபவிப்பாரார்? அர்ச்சாவதாரத்தின் ஐசுவரியமும் விபவாவதாரத்தின் ஐசுவரியமும் ஒருமடை கொண்டிருக்குமிடம் என்பது தோன்ற மூலம் இருக்கும் அழகையறிந்து வியாக்கியானமிட்ட அழகை என் சொல் வோம்?

என்னுறுநோய் அறியச் சென்றுரையாய் : அறிய #. என்பதை உரையாய்' என்பதனோடு கூட்டியுரைத்தலும்