பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் - துரது பற்றியவை 435

சென்று என்பதனோடு கூட்டியுரைத்தலுமாக இரண்டு

நிர்வாக முண்டு. 'நீ சென்று என்னுடைய நோயை

அவன் நன்றாக அறிந்து கொள்ளும்படிச் சொல்லுக'

என்பது முன்னைய அந்வயத்தின் பொருள். 'நீ தளர்ந்து

செல்லுகின்ற நடையிலேயே என்னுடைய ஆற்றாமை யெல்லாம் அவன் அறிந்து நாக்கிலும் பல்லிலும் நீர்ப்

பசையற்று உடம்பு வெளுக்கும்படியாகச் சென்று. தூது சொல்லுக' என்பது பின்னைய அந்வயத்தின்

கருத்து.

வண்டுவிடு தூதாகத் திருநெடுந் தாண்டகத்திலும் ஒரு பாசுரம் உண்டு. இது அணி அழுந்துார் ஆமருவி அப்ப னுக்குத் துாது அனுப்புவதாக அமைந்தது.

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்

தேன் அதனை வாய்மடுத்து, உன்பெடையும் நீயும் பூமருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த

அறுகால சிறுவண்டே! தொழுதேன் உன்னை; ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான்

அணி அழுந்துார் நின்றானுக்கு இன்றே சென்று நீமருவி அஞ்சாதே நின்று ஒர் மாது

நின்நயந்தாள் என்றுஇறையே இயம்பிக்

கானே (26)

(தேன்மருவு - தேன் நிறைந்த பொழில் - சோலை; போது - மலர்; வாய்மடுத்து - பானம் பண்ணி; பொறி - மேனியின் புகர்; மருவி - பொருந்தி: ஆநிரை - பசுக் கூட்டம்; மருவி - விரும்பி; மருவி-பொருந்தி; நயந்தாள் - ஆசைப் பட்டாள்; இறையே - சிறியதொரு வார்த் தையை)

என்பது பாசுரம். தலைவியை ஒரு முகத்தாலே ஆற்று விக்க வேண்டும் என்று நினைத்த தோழியானவள் சில