பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் - துTது பற்றியவை 427

  • ്ബ=

பூதரான ஆசாரியர்கள் மிகவும் உத்தேச்யர் என்ற சாத்திரார்த்தம் ஈண்டு உணரத்தக்கது.

பாசுரத்தின் பன்னிரண்டடிகளில் செய்தியைக் கூறத் தொடங்குகின்றாள். 'அமரர் கோமான் பக்கல் சென்று தூது செல்லுக’ என்றாள்; அந்தோ! அமரர் கள் அதிபதியன்றோ? அந்த மேன்மையிலே என்னால் கிட்ட நெருங்க முடியுமோ?’ என்று வண்டு சொல்ல, ஆமருவ நிரைமேய்த்த அமரர் கோமான்' என்கின்றாள்; பரத்துவம் ஒரு புறத்தே இருப்பினும் பசுக்களுடன் பொருந்தி அவற்றோடு பொழுது போக்குபவன் காண்; நித்திய சூரிகட்குத் தன்னையொழியச் செல்லாதாப் போலே பசுக்களை யொழியத் தனக்குச் செல்லாதபடி யான குடிப்பிறப்புடையவன் காண்; மேன்மையைக் கண்டு தயங்காமல் செல்லலாம் என்கின்றாள்; "ஆமாம் அஃது ஒரு காலத்திலன்றோ? கிருஷ்ணாவதாரம் கடந்து நெடுநாளாயிற்றே! என்று வண்டு சொல்ல, அணியழுந் தூர் நின்றானுக்கு’ என்கின்றாள். அக்காலத்தில் பசுக் களை இரட்சித்தாற்போலே, அக்காலத்திற்குப் பிற்பட்ட வர்களாய்ப் பசுப்போல் இருப்பாரையும் இரட்சிக்கைக் காகப் பின்னானார் வணங்குஞ் சோதியாக”த் திருவழுந் துரரில் நிற்கின்றான் காண்; அங்கே சென்று அறிவிக்க வேண்டும் என்கின்றாளாயிற்று.

'எம்பெருமான் பிரிந்து சென்ற போது சேனுகளும் திருவரங்கம் நம்மூர்' என்றும் புனலரங்கம் ஊர்” என்றும் சொல்லிச் சென்று திருவரங்கத்திலே பொருந்தியிருக்க திருவழுந்துாரிலே தூது விடுகை பொருந்துமோ என்னில்: "புனலரங்கம் ஊர் என்று போயினாரே (25) என்றது உண்மைதான்; ஆயினும் பிரிந்து சென்றவர் முழுதும் போயிருக்கமாட்டார்; திருவழுந்துாரிலே பின்தங்கி நின்றி ருக்கக் கூடும்; அங்கே சென்று அறிவிக்கலாம் என்கின்