பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

玺28 பரகாலன் பைந்தமிழ்

நாள் போலும். அன்றியே, புனலரங்கம் ஊர் என்று போயினார்; திருவரங்கத்தே போய்ப் பார்த்தார்; நீர் வாய்ப்பும் நிழல் வாய்ப்பும் கண்டவாறே தனியே கிடப் பதற்குப் பொருந்தியிராது; எதிர் கொண்டு வரப்புறப்

பட்டிருப்பார். இப்போது திருவழுந்துாரிலே எழுந்தருளி யிருக்கக் கூடும்; அங்குச் சென்று அறிவிக்கலாம் என்கின் நறாள் என்றும் கொள்ளலாம்.

அணியழுந்துனர் நின்றானுக்கு: "இத் தலத்தைக் கடந்து அப்பால் போகமாட்டாமையாலே அங்கேயே நிலையாகப் பிரதிட்டை செய்ததுபோல் நிற்கின்றாள்' என்கின்றாள். "திருவாலி - திருநகரியிலிருந்து ஆள் வருவது எப்போதோ? என்று எதிர்பார்த்த வண்ணம் நிற்கின்றான் என்கின்றாள்' என்றும் சொல்லலாம்.

இன்றே சென்று: 'நாளை செய்கின்றேன் என்று சொல்லக் கூடாது; நாளைக்கு நான் இருக்கப் போகி றேனோ? நான் இல்லையானால் அவன்தான் இருக்கப் போகிறானோ? இரண்டு தலையும் அழிந்த பிறகு நீ எங். குச் சென்று யார் பக்களில் என்ன சொல்லப் போகின் றாய்? இரண்டு தலையும் அழிந்தால் பின்னர் உலகந்தான் இருக்குமா? நீயும் அழிந்தாய்யாவாய்;. ஆக, நாங்களும் பிழைத்து நீயும் வாழவேண்டியிருந்தாயாகில் இன்றே சென்று அறிவிப்பாய்’ என்றாளாயிற்று.

மேருவி: அவன் ஆமருவி நிரை மேய்த்தவனாகை யாலே திரியக் (பிராணி) சாதியான உனக்கும் முகந்தரு வான்; நீ சென்று கிட்டலாம். அவனுடைய சில குணத் தைக் கண்டும் அவரை நாம் தேவர் என்று அஞ்சி னோமே (21) என்று மருண்டு பின்வாங்கின என்னைப் போலன்றி அருகே பொருந்தி நிற்கலாம்.

அஞ்சாதே நின்று: வார்த்தை சொல்லும். விஷயத் திலும் அஞ்சவேண்டா; நம்முடைய அந்தப்புரத்தி