பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் துாது பற்றியவை 43 Ꭵ"

என்பதாம். 'நான் ஆற்றாமையாலே கண்ணாம் சுழலை யிட்டுச் சொன்னவற்றையெல்லாம் அங்குச் சொல்லாதே; அவன் தரிக்கும்படி அளவறிந்து வார்த்தை சொல்லுக என்றுமாம்” என்ற பெரியவாச்சாம் பிள்ளை வியாக்கி யான சூக்தியின் போக்கியதை அநுபவிக்கத் தக்கது.

திருநெடுத் தாண்டதத்திலும் நாரை விடுதூதாக ஒரு பாசுரம் காணப் படுகின்றது. இது திருக்கண்ணபுரத்து எம்பெருமானுக்குத் துாது விடுவதாக அமைந்தது.

செங்கால மடநாராய்! இன்றே சென்று

திருக்கண்ண புரம்புக்கு என்செங்கண் மாலுக்கு என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி யாகில்

இது ஒப்பது எமக்குஇன்பம் இல்லை; நாளும் பைங்கானம் ஈதுஎல்லாம் உனதே ஆகப்

பழனமீன் கவர்ந்துண்ணத் தருவேன்; தந்தால் இங்கேவந் திணிதிருப்பது உன்பெடையும் நீயும்

இருநிலத்தில் இனிதின்பம் எய்த லாமே (27)

(செங்கால-சிவந்த கால்களையுடைய, மட-அழ கிய; காதல்-விருப்பம்; நாளும்-நீ உள்ள கால மெல்லாம்; உனதே ஆக-உனக்கு உரியதாகும் படியாக; பழனம்-வயல்: பெடை-மனையாட்டி:

முன்பாசுரத்தில் (26) வண்டைத் தூதுவிட்டாள்; அது சென்று தூதுரைத்துத் திரும்பும் ஆளவும் தரித்திருக்க மாட்டாமையால் பின்னையும் நாரையொன்றைத் தூது விடுகின்றாள். பிராட்டியைத் தேடும் பொருட்டு எல்லாத் திசைகளிலும் வானர முதலிகளை ஏவினாப்போலே இவளும் கண்ணாற் கண்டவற்றையெல்லாம் ஏவுகின் றாள். இராமாவதாரத்தில் வானரசாதி வீறுபெற்றது போலே ஆழ்வார்கள் அவதரித்த பின்பு பட்சி சாதி வீறு பெற்றது என்பர் பராசரபட்டர்.