பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛3器 பரகாலன் பைந்தமிழ்

செங்கால மடநாராய்' என்று மிக்கு இரக்கத் தோன்றக் கூவினதும் நாரையொன்று இசைவு தோன்ற அருகே வந்து நிற்கின்றது. இன்றே சென்று; நாளை பார்த்துக் கொள்வோம் என்று இருந்துவிடலாகாது; இப்போதே செய்ய வேண்டிய காரியம் காண். நான் பிராட்டியைப் பிரிந்து ஒரு நொடிப்பொழுதும் பிழைத் திருக்க மாட்டேன்’ என்ற அவர் படியைப் பார்த்தாலும் காலதாமதம் செய்தலாகாது. என் நிலையைப் பார் தாலும் கால தாமதம் செய்யலாகாது. இப்பொழுதே புறப்பட வேண்டும்.

நாரை எவ்விடத்திற்கு? என்ன 'திருக்கண்ணபுரம் புக்கு என்கின்றாள் பரகாலநாயகி. முன் பாசுரத்தில் திருவழுந்துருக்குச் செல்லுமாறு வண்டைத் தூதுவிட்ட ஆழ்வார் நாயகி இப்பாசுரத்தில் அத்திருப்பதியை விட்டுத் திருக்கண்ணபுரத்திற்குத் துதுவிடுவானேன்? என்னில் : அந்த வண்டைத் திருவழுந்துTரில் அவன் கண்டிருப்பன் அங்குத் தரித்திருக்க மாட்டாமல் அந்த வண்டுடன் அரைகுலையத் தலைகுறைய எதிரே வந்து ஒரு பயணம் புகுந்து திருக்கண்ணபுரம்வரை வந்திருக் கும் சமயம் இப்போது; அங்குச் செல்லலாம் என்கின்றாள் போலும். பொதுவாக எம்பெருமானை நோக்கித் துது விடுகின்றாளாதலால் எந்தத் திருப்பதியை நோக்கித் து.ாதுவிடினும் குறையொன்றும் இல்லை என்க.

திருக்கண்ணபுரத்தில் அவரைக் கண்டுபிடிக்கும் வகை ஏதென்று நாரை வினவ, என செங்கண் மாலுக்கு என்கின் றாள். "அவர் என்னிடத்தில் கொண்டிருக்கும் மதி மயக்கம் (வியாமோகம்) எல்லாம் திருக்கண்களிலே காணலாம்படி இருக்கும் காண். கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள்’ என்னைப்பேதைமை செய்தனவே: (அமனாதி-8)