பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

噬密6 பரகாலன் பைந்தமிழ்

பொன்னங் கழிக்கானல்

புள்ளினங்காள்! புல்லாணி

அன்னமாய் நூல்பயந்தற்கு

ஆங்கிதனைச் செப்புமினே (9.4:2)

(முன்னம்-முன்பொருகால், மன்னன்-தேவாதி தேவன்; புள்-பறவை; நூல்-வேதம்; பயந்தஉபகரித்த 1

புல்லாணி எம்பெருமானிடம் சில பறவைகளைத் துTதுவிடு வதாக அமைந்த பாசுரம் இது. "அடியார்கட்குக் காரியம் செய்யமாட்டாதவனையோ நான் ஆசைப்பட்டுத் துடிக் இன்றேன்? பயனையே கருதும் இந்திரனுடைய கண்ணி ரைக் கண்டு பொறுத்திருக்கமாட்டாமல் தன்னை அழிய மாறியும் காரியம் செய்தவனன்றோ அவன்?’’ மர்கனாச் சுடருடம்பாய் மலராது குவியாது' (திருவாய் 3.1:8) என்னும்படி எப்போதும் ஒருபடிப் பட்ட தன்மையை உடைத்தான திருமேனியை வாமன வடிவ மாக்கி அலம்புரிந்த நெடுந்தடக்கை'யைக் (திருநெடுந். 6) கொண்டு தானம் பெற்று மூவுலகளந்தான்; ஒருபோது தன்னை அநுசரித்திருந்தும் மற்றொரு போது படை யெடுத்து எதிரம்பு கோத்துத் திரிகின்ற இந்திரனுக்காக இத்தனை காரியம் செய்தான் என்று கேட்டு அப்படிப் பட்டவன் அந்தோ பயன் கருதாத நமக்கு அப்படிப்பட்ட அருந்தொழிலொன்றும் செய்யாவிடினும் முகத்தையும் காட்டமாட்டா தொழிகின்றானே' என்று வருந்து வதாகச் சொல்லுகின்றாள் முன்னிரண்டடிகளால். மேனிநிறம் வேறுபடுவதைப் பொன்பயத்தலாகச்சொல்லு வது கவிமரபு.

பொன்னங்கழிகானல் : புல்லாணிகடற்கரைக்குஇத்திரு நாமம் இட்டு மகிழ்கின்றார் பரகாலர். வானமாமலையில் சேற்றுத்தாமரை (திருவாய் 5.7:1) என்ற திருநாமத்துடன்