பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் - துரது பற்றியவை 43?

தடாகமும் தேனமாம் பொழில் (5.7:6) என்ற திருநாமத் துடன் தோப்பும் திருமோகூரில் தாளதாமரை (10.1:1) என்ற திருநாமத்துடன் தடாகமும் நம்மாழ்வார்திரு வாக்கில் வந்துள்ளமை ஈண்டு நினைந்து மகிழ்த்தக்கது.

அன்னமாய் நூல் பயந்தாற்கு : இந்தச் சிறப்புப் பெய ரிட்டு எப்பெருமானைக் குறிப்பிடுவதற்கு இரண்டு வகையான கருத்து உண்டு (1) பிரமன் இழந்த வேதங் களை அன்னமாய் அவதரித்து மீட்டுக் கொடுத்தமையால், அதுபோலவே தான் இழந்திருக்கும் மேனி நிறத்தையும் மீட்டுக்கொடுக்கவல்லவர் அவர் காண்மின் என்று குறிப் பிடுதல் ஒரு கருத்து, (2) தூது போகின்ற நீங்கள் இவள் நம்மை பரபுருடன் பக்கல் போகச் சொல்லுகின்றாளே: இது நம்மாலாகுமோ? அவர் எங்கே? நாம் எங்கே என்று நீங்கள் அஞ்சவேண்டுவதில்லை; அவன்தான் அன்ன மானவனாகெயாலே உங்கள் சாதியாக இருப்பவன் காண்மின்; இனத்தார் பக்கல் செல்லுவதற்கு அஞ்ச வேண்டா என்று குறிப்பிடுதல் மற்றொரு கருத்து.

ஆங்கு இதனைச் செப்புமினே: இங்கே பெரியவாச் சான்பிள்ளையின் வியாக்கியானம் : ஒருத்தியின் நிறம் மீட்கைக்காக வந்திருக்கின்ற இடத்தே அறிவியுங்கள்: ஒருத்திக்கே காரியம் செய்யக் கடவோம் என்னும் நியதி உண்டோ?' என்பது. ஆங்கு என்பது புல்லாணியைக் குறிக்கும். தன்னைப் பிரிந்து நிற வேறுபாடு அடைந்து வருந்திக்கிடக்கின்ற சீதாப்பிராட்டியின் நிறத்தை மீட் கைக்காக (அதாவது, அவளுடன் புணர்வதற்காக) வந்து நிற்கின்ற தலமாதலால் அக்கருத்தை உட்கொண்டு ஆங்கு' என்று சொன்னபடி; சீதையாகின்ற ஒருத்திக்கே காரியம் செய்யக் கடவோம் என்று ஏதேனும் நியதி உண்டோ? பர கால நாயகிக்கும் சிறிது உதவக் கூடாதோ? என்று சொல் லுங்கள் என்றவாறு. செப்புமின்' என்றதனால் அப் பெருமானை ஈண்டுக் கொண்டு வர முயலவேண்டா; என்