பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4强G பரகாலன் பைந்தமிழ்

யிட்டுள்ளார். இந்த அநுபவம் இயல்-16, 17, 18, 19 களில் விளக்கப்பெற்றுள்ளது.

திருநாமங்களைச் சொல்லி அநுபவித்தல்: சகஸ்ரநாம அர்ச்சினை இந்த முறையினின்றே எழுந்தது என்று கருத லாம். அநாதி காலம் சிற்றின்ப நுகர்ச்சிகளில் ஊன்றிய வராய் எம்பெருமானை மறந்திருந்த இவ்வாழ்வார் ஒரு காரணமும் பற்றாத எம்பெருமானின் கருணையால் திரு மணங் கொல்லையில் வழிப்பறி செய்து கொண்டிருந்த காலத்தில் திருஎட்டெழுத்து மந்திரம் பெற்றுத்தன் சொரு பம் உணர்ந்து, தாம் உய்வதோர் பொருளை அறிந்து கொண்ட களிப்பால், எக்களிப்பால், "நான் கண்டுகொண் டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று ஒரு முறைக்கு ஒன்பது தடவை சொல்லி மகிழ்கின்றார். இந்தப் பாசு ரங்களையும் (1,1) பன்முறைப்படித்துப் படித்து அநுபவித் தால் அஃது ஒப்பற்ற அநுபவம் என்பதை அறியலாம்.

'நற்றுணையாக, நான் உய்யக் கண்டு கொண்ட நாராயணா என்னும் நாமம் அருளும் நன்மைகளையெல்

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்

படுத்துயர் ஆயின வெல்லாம் நிலந்தரம் செய்யும்; நீள்விசும்பு அருளும்; அருளொடு பெருநிலம் அளிக்கும்; வலந்தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற

தாயினும் ஆயின செய்யும்; நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்,

நாராய ணா என்னும் நாமம் (6)

[குலம்-உயர்ந்த குலம்; செல்வம்-ஐசுவரியம்; நீள்

விசும்பு-பரமபதம்; பெருநிலம்-கைங்கரியபதவி, வலம்-சக்தி; ஆயின.இதங்கள்)