பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையநுபவம் 441

என்ற பாசுரத்தால் ஆழ்வாரே எடுத்துக் காட்டி மகிழ்கின் றார். திருமந்திரம் நற்கலத்தைத் தரும் துரீவைணவ லட்சுமியை தரும்; கழுவாயால் தீரக் கூடிய பாபங்களும் கட்டாயமாக அநுபவித்தே தீரவேண்டிய பாவங்களும் எவ்வளவு இருப்பிலும் அவை அடியவர் திறத்தில் ஒன்று மில்லாமல் போகும்; தரை மட்டமாக்கி விடும்; ஒப்பற்ற ஆனந்தமயமான வீடுபேற்றையும் நல்கும்; அங்குக் கைங் கரியம் செம்யும் பணியையும் அளிக்கும். இடைவிடாமல் பகவததுபவம் தருவதற்குப் பாங்கான ஆற்றலைத் தரும். மேலும் அறியாதவற்றையும் தானே கொடுக்கும். பத்துத் திங்கள் மெய்நொந்து பெற்ற தாய் செய்யும் நன்மைகளை விட அதிகமாகவே செய்யும்' என்று விவரிக்கின்றார். ஆகவே இதனை,

துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்

துயரிலீர் சொல்லிலும் நன்றாம்

நஞ்சுதான் கண்டீர் நாம்முடை வினைக்கு

நாராய னாவென்னும் நாமம் (10)

என்று அன்பர்க்கு உபதேசிக்கின்றார் ஆழ்வார். 'எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதமாய திருமால் திருநாமம் -நமோ நாராயணமே (6.10:6) என்று நமக்கு அமுதா கிய இதுவே கொடுவினைக்குக் கொடிய நஞ்சாகஇருக்கும்; ஆகையால் இத்திருமந்திரத்தைத் தவிர மற்றதெல்லாம். சம்சாரத்திலே வேர் விடுவதற்கு உறுப்பாக இருக்கும் என் றும், இஃதொன்றுமே சம்சாரத்தை வேரறுக்க வல்லது என்றும் தெளிந்து கொண்டு எப்போதும் இதனை அநுசந் திப்பதிலேயே ஊன்றியிருங்கள்' என்று அன்பர்கட்கு உப தேசித்துத் தலைக்கட்டுகின்றார்.

திருவேங்கடம்பற்றிய ஒரு பாசுரத்தில் இதுபற்றிய ஒரு குறிப்பு உள்ளது.