பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையதுபவம் 443

கின்றார் இந்த ஆழ்வார் திருநறையூர் நம்பியிடம் திருவிலச்சினை (சங்க சக்கரம்) பெற்றார் என்பதை நாம் அறிவோம். இதனால் திருநறையூர் நம்பி இவ்வாழ் வாருக்கு ஆசாரியருடைய திருநாமமே அநுசந்தேய மாத லால் பெரிய திருமந்திரமாகின்ற அத்திரு நாமத்தைத் தாமும் அநுசந்தித்துப் பிறர்க்கும் கற்பிக்கும்படிச் சொல் லுகின்றார் இத் திருமொழியில்.

இந்த எட்டெழுத்து மந்திரத்தைப் பேசும்போது அதற்கு மூலமாக இருக்கும் எம்பெருமானின் அவதார சேஷ்டிதங்களை நாவினிக்கச் சொல்லிச் சொல்லி இறைய நுபவத்தில் ஈடுபடுகின்றார்.

கிடந்த நம்பி குடந்தை மேவிக்

கேழலாய் உலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரணழிய கடந்த நம்பி கடியார் இலங்கை

உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில்

நமோ நா ராயணமே (1)

(கிடந்த-பள்ளி கொண்டிருக்கின்ற; மேவிபொருந்தி; கேழல்-வராகம்; நம்பி-சுவாமி;

எறிஞர்-சத்துருக்கள்; அரண்-கோட்டை, கடந்த-நாசம் .ெ ச ய் த; நடந்த-அளந்து கொண்ட.)

'வராக அவதாரத்தில் பூமிப் பிராட்டியை மீட்ட விடாய் தீரவும் இராமாவதாரத்தில் அரக்கரை அழித்து இலங்கையைப் பாழ்படுத்தின சிரமந்திரவும் மாவலியின் செருக்கை யடக்குவதற்காக ஈரடியால் உலகமெல்லாந் தாவியளந்த ஆயாசம் தீரவும் திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளா நின்ற பெருமான் திருநறையூரில் திகழா