பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 பரகாலன் பைந்தமிழ்.

நின்றான்; அவனுடைய திருநாமம், நமோ நாராயணமே' என்பதாகும் என்கின்றார். இவ்வாறே எல்லாப் பாசுரங் களிலும் அவதார சேஷ்ஷதங்களை நாவினால் நவிற்றி ஆழ்வார் இறையநுபவத்தில் திளைப்பதைக் காண் கின்றோம். ஒன்பதாம் பாசுரத்தில் 'கடலை ஆடையாக வுடைய பூமிப் பிராட்டியார், பெரிய பிராட்டியார், நான்முகன், சிவன், இந்திரன் மற்றுமுள்ள தேவர்கள் இவர்கட்கெல்லாம் நாதன் என்றே நாராயண நாமத்தின் பொருள்' என்று வெளியிட்டு, 'துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்; துயரிலிர் சொல்லிலும் நன்றாம், நஞ்சுதான் கண் உர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் (1.1:10) என்றருளிச் செய்ததை நினைந்த விண்ணம் நங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நராயணமே' என்கின்றார். இதனைத் தாமும் அநுபவித்து பிறரையும் அநுபவிக்குமாறு செய்கின்றார். திருமந்திரத்தின் முக்கியமான பொருள் பாகவத. சேஷத்துவமே என்பதை ஆழ்வார் பாசுரம் விளக்கு கின்றது. மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத் தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை' என்ற பாசுரப்பகுதியைக் காண்க. பாகவத சேஷத்துவத்தின் விவரம் அடுத்து இயலில் காணலாம்.

பகவத் குணாதுபவம் : எம்பெருமானின் திருக்குணங் களைச் சொல்லிச் சொல்லி அநுபவித்தல் ஒருவகை பகவதநுபவம். எம்பெருமான் அநந்த கல்யாண குணங் களின் நிதியாக இருப்பவன். அவனுடைய குணங்கட்கு ஒர் எல்லை இல்லை. பலவகைப்பட்டு எல்லையற்றிருக்கும். அத்திருக்குணங்கள் மேன்மைக் குணங்கள் என்றும் எளிமைக்குணங்கள் என்றும் இரண்டு பாகுபாடுகளை

1. இதன் விளக்கத்தைப் பாண்டி காட்டுத் திருப் பதிகள்” (பாரி நிலையம் 184, பிரகாசம் சாலை, சென்னை-108)-பக் 165-166 காண்க.