பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44& பரகாலன் பைந்தமிழ்

வடிகள் அடியார்களைக் காப்பதற்காக வன்றோ காடுறைந்தன; தீயோர்களைத் துடைத்து நல்லோர் களைக் காத்தலை சங்கல்பமாத்திரத்தினால் செய்து விடாமல் கைதொட்டுச் செய்து நிறம்பெறவேண்டும் என்கின்ற விருப்பத்தினால் நல்லவர்களான முனிவர்களும் துட்டர்களான அசுரர்களும் இராக்கதர்களும் இருந்த விடங்களைத் தேடித் திரிந்து நடந்து சென்று செயல் முறையைப் பார்த்த மகாகுணம் அறியாயோ?” என்கின்றாள் மற்றொருத்தி (1).

பெரியாழ்வார் என் நாதன் தேவிக்கு (3.9) என் னும் திருமொழியில் ஆய மங்கையரின் நிலையைத் தாமடைந்து ஒருத்தி கிருட்டிணாவதார வரலாற்றைப் பாடுவதாகவும், மற்றொருத்தி இராமாவதார வரலாற் றைப் பாடுவதாகவும், அருளிச் செய்ததும், 'கதிரா யிரம்' (4.1) என்னும் திருமொழியில் ஆழ்வாரே தம்மை இரண்டு வகையாக வகுத்துக் கொண்டு சர்வேசுவரனைக் கண்ணாலே காண வேண்டும் என்று தேடுதலை ஒரு வகுப்பாகவும், அப்படித் தேடுகின்றீர்களாகில் அவனை உள்ளபடிக் கண்டார் உளர்’ என்று விடையிறுத்தலை ஒரு வகுப்பாகவுமாக அருளிச் செய்ததும்; குடிக் கொடுத்த சுடர்க் கொடியும் பட்டி மேய்ந்த காரேறு' (14) என்னும் நாச்சியார் திருமொழியில் தன்னையே இரண்டு வகுப்பாக் கிக் கொண்டு இங்கே போதக் கண்டீரே" என்று கேட்ப தும், விருந்தாவனத்தே கண்டோமே என்று விடை கூறு வதுமாக அருளிச் செய்ததும் ஈண்டு நினைந்து மகிழத்

リ。

ஒருவர் இரண்டு மனிதர்களின் தன்மையை ஒரே சம பத்தில் அடைதல் என்பது பொருந்துமோ? என்னில்: எம் பருமானின் அருளின் மிகுதியால் ஞானத்தில் தடையுற் ால் பொருந்தாதது ஒன்றில்லை. பரமபதத்தில் நித்திய