பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莞岳酸 பரகாலன் பைந்தமிழ்

கொண்டல் வண்ணனைக்

கோவலனாய்வெண்ணெய் உண்ட வாயன்

என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்

கன்என் அமுதினைக் கண்ட கண்க்ள்

மற்றொன்றினைக் கானாவே." (கொண்டல்.மேகம்; வண்ணன்-நிற்த்தன்; அண்

டர்கோன்-நித்திய சூரிகட்குத் தலைவன் என்று முத்தாய்ப்பாகக் கூறுவர்.

சூடிக் கொடுத்த சுடர்க் கொடி அழகிய மணவாளரை என் அரங்கத்து இன்னமுதர், குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழுகமலப் பூ அடிகர்' என்று பேசி அவன் அழகில் ஆழங்கால் படுவர். மணக்கால் நம்பிகள்-அழகிய மண்வாளனைக் காட்டி-ஆளவந்தாரைப் பக்தி நெறிக்குத் திருப்பின வர லாறும் உண்டு. உறங்கா வில்லியையும் பொன்னாச்சியா ரையும் அழகிய மணவாளரின் எழிலுருவத்தைக் காட்டி அவர்களைக் விஷய காமத்தினின்றும் பகவத் விஷயகாமத் திற்கு உய்த்த பெருமையை எம்பெருமானார் பெறு கின்றார்.

நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை அழகரின் திரு மேனி அழகில் ஈடுபட்ட திறம் தனிச் சிறப்பு வாய்ந்தது. கற்பகத் தரு கப்பும் கிளையுமாகப் பணைத்துப் பூத்தாற். போல்ே நிற்கின்றான் எம்பெருமான். அவனது அழகு வெள்ளம் அல்ை மோதி ஆழ்வார்மீது பாய்கின்றது. எம்பெருமானை நோக்கி வினவுகின்றார்.

6. அமலனாதி-10 7. நாச். திரு. (11:2)