பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையதுபவம் 451

முடிச்சோதி யாய் உனது

முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி நீநின்ற

தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச்சோதி ஆடையொடும்

பல்கலனாய் நின்பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ?

திருமாலே கட்டுரையே?

(முடி-தலை; அடி-திருவடி படிச்சோதி-இயற்கை

யான காந்தி; கடி-திருவரை)

என்ற திருப்பாசுரத்தில்.

காஞ்சி திருஅட்ட புயகரத்து எம்பெருமானின் உருவ வெளிப்பாட்டு அழகில் ஈடுபட்ட திருமங்கையாழ்வார் நாயகி பாவனையில்,

மேவி யெப்பாலும் விண்ணோர்வணங்க வேதம் உரைப்பர்,முந் நீர் மடந்நை தேவி அப்பாலதிர் சங்கம்; இப்பால்

சக்கரம்; மற்றிவர் வண்ணம் எண்ணில் காவி யொப் பார்; கட லேயு மொப்பார்;

கண்ணும் வடிவும் நெடியராய் என் ஆவியொப் பார்; (2.8:8)

(விண்ணோர்-நித்திய சூரிகள்; மேவி-சூழ்ந்து கொண்டு; முந்நீர் மடந்தை-இலக்குமி, தேவிபட்டமகிஷி, வண்ணம்-நிறம்; காவி-கருநெய் தில்பூ, ஆவி-உயிர்)

என்று அநுபவித்துப் பேசுகின்றார். "என் முன்னே வந்து தோன்றின.பெரியவர் தனியராய் வந்திலர்: நித்திய சூரி

8. திருவாய்-3.1:1