பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 பரகாலன் பைந்தமிழ்

ཕ───ས་ཡག་ མཁ༥༣

தான் உகந்த ஊரெல்லாம்

தன்தாள் பாடிப்

பூங்கோவல் ஊர்தொழுதும்,

போது நெஞ்சே திருநெடுந்-6

என்றும் இந்த ஆழ்வாரே குறிப்பிடுவதால் எம்பெருமான் உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றிலும் சென்று சென்று சேவிக்க வேண்டும் என்பது உட்கருத்தாகும்.

மனத்தை ஆற்றுப் படுத்துதல் : சில சமயம் மனத்தை வேறாகவும் தம்மை வேறாகவும் வேறுபடுத்திக் காட்டும் முறையில் மனத்திற்கு உபதேசம் செய்வார். இவ்வாறு நெஞ்சை வேறுபடுத்திச் சொல்லுதல் கவிமரபு. நெஞ்சைத் தூது விடுவதாகவும் சொல்லுவார்களன்றோ? நல்ல பொருள்களைப் பேசிக் கொண்டு பொழுது போக்கு வதற்கு இந்த இருள் தருமா ஞாலத்தில் வேறு யாரும் உடன் படாமல் உண்டியே உடையே உகந்தோடு பவர் களாயிருப்பதால் உசாத்துணைக்கு நெஞ்சு தவிர வேறில்லாமையால் அந்த நெஞ்சை நோக்கித் தானே வார்த்தை சொல்ல வேண்டும். ஆகையால் நெஞ்சை விளித்துப் பேசுவதென்பது பக்தர்கட்கு நற்போது போக் காக அமைந்த ஒன்று. இந்த மரபை யொட்டியே பரகர்ல ரும், திருவேங்கடம்பற்றிய பதிகம் ஒன்றில் (1. 8), "திருவேங்கடம் அடை, நெஞ்சமே!" என்றும், திருநாங் கூர் மணிமாடக் கோயில்பற்றிய பதிகத்தில் (3. 8ولإ "மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே' என்றும், திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்பற்றிய பதிகத்தில் (3.10) அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே!” என்றும், திருநறையூர் பதிகம் ஒன்றில் (6.4) நறையூர் நாம் தொழுதும் எழு, நெஞ்சமே!” என்றும், மற்றொரு பதிகத்தில் (6.9) "திருவாளன் இணை அடியே அடை,