பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பரகாலன் பைந்தமிழ்

பொருளாயிருப்பவன்; நிந்திய சூரிகளின் நாதன் என்கின்றார்.

திருநறையூர் எம்பெருமானை மங்களா சாசனம் செய்யும் போது,

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த்

தயங்கொளிசேர் மூவுலகும் தானாய் வானாய் தன்னாலே தன்னுருவல் மூர்த்தி மூன்றாய்த்

தான்ஆயின் ஆயினான் (6. 6: 6) பயந்த உண்டு பண்ணிக் கொண்ட, தானாய். திவ்விய ஆத்தும சொரூபத்தையுடையவனாய்; தானாய் - தன்னுள் அடக்கிக் கொண்டவனாய்; ஆயன் - இடையன்!

என்று பரத்துவ நிலை எம்பெருபானை அநுபவிக்கின்றார். 'எம்பெருமான் தன்னுடைய சொரூப ஸ்திதி முதலியவை தானிட்ட வழக்காம்படி இருப்பவன்; மூவுலகினையும் தன்னுள் அடக்கிக் கொண்டவன்; பரம பதத்திற்குத் தலைவன்; தன்னுடைய சங்கல்பத்தினால் தன்னுடைய சொரூபத்தை மூன்று வகுப்பாக வகுத்துக் கொண்டவன்; இவனே இடையனாகவும் வந்தவன்' என்கின்றார்.

திருக்கண்ண மங்கை எம்பெருமானை மங்களாசா சனம் செய்யும்போது,

திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத்

தேவ தேவனை, மூவரில் முனைய விருத்த னைவிளங் கும்சுடர்ச் சோதியை

விண்ணை, மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்த னை அரி யைப்பறி கீறிய

அப்பனை, அப்பில் ஆரழ லாய்நிறை கருத்தனை (7. 10: 7)