பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பிறப்பு, வளர்ப்பு, திருமணம்

சோழமண்டலத்தில் திருவாலி நாடு’ என்ற ஒரு பகுதி எண்டு. இதுவே மங்கை நாடு’ என்று கருதவும் இடமுண்டு. இப்போது சிறப்புடன் திகழும் திரு நகரி’ப் பகுதியைச் சார்ந்தது. இந்தத் திவ்விய தேசத்தின் அருகி லுள்ளது திருக்குறையலூர் என்ற சிற்றுார் இந்த ஊரில் கள்ளர்குடியில் தோன்றிய ஒருவர் சோழ அரசனுக்குச் சேனைத்தலைவராக இருந்தார். இவருக்கு ஒருமகன் பிறந்தான். பிறந்த ஆண்டு நள என்பது; மாதம் கார்த் திகை நாள்: முழுமதியம் கூடிய கிருத்திகை நட்சத்திரம். கலந்த திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே என்பது இவரது வாழித் திரு நாமம். இவரைத் திருமாலின் சார்ங்கம் என்ற வில்வின் கூறாக அவதரித்த தாகக்கொள்வர் வைணவப் பெருமக்கள். பிறந்த குழந்தை நீல நிறமாக இருந்தது பற்றி லேன்' என்ற பெயர் வழங் கியது. பெற்றோர் இட்ட பெயர் கலியன் என்பது. இவரே பின்னர் திருமங்கையாழ்வாராகின்றார். இவருக் குப் பரகாலன், கலிகன்றி முதலிய திருநாமங்களும்

உள்ளன.

1 Tamil Studies என்பதன் ஆசிரியர் எம். சீநிவாச ஐய்யங்கார் thief's caste என மொழிபெயர்த்துக் கொடுத்தார்.

ப.க.-1