பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛台静 பரகாலன் பைந்தமிழ்.

வளர்ந்த வராக நாயனார் நம்மை ஆளவள்ள பிரபு என்று கூறித் தம்மையே மறந்து அநுபவிக்கின்றார் இப் பாசுரத்தில்.

மச்சாவதார அநுபவம் : ஆழ்வார் மச்சாவ: தாரத்தை அநுபவிக்கின்றார்.

கொழுங்கயலாய் நெடுவெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி அண்டத் தப்பால் எழுந்தினிது விளையாடும் ஈசன் எந்தை (6. 6: 3)

(கொழுங்கயல்-கொழுத்த மீன், நெடுவெள்ளம்பிரளய வெள்ளம்; அண்டத்து - அண்டபித்தி அளவும்!

இப் பாசுரப் பகுதியில் மச்சாவதார வரலாறு அதுசந்திக்கப் பெறுகின்றது. இன்னொரு பாசுரத்திலும்,

வானோர் அளவும் முதுமுந்நீர்

வளர்ந்த காலம் வலியுருவின்

மீனாய் வந்து வியந்துய்யக்

கொண்ட தண்தார மரைக்கண்ணன் (8. 8: 1)

(வானோர் - தேவர்கள்; முதுமுந்நீர் - கடல் வெள்ளம்; வலி உருவின் - வலிமை கொண்ட வடிவை, உய்ய பிழைப்பித்தருளினi

என்று இந்த அவதாரத்தை அநுபவிக்கின்றார்.

நிலையிடம் எங்கும் இன்றிநெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர்

"தலையிட மற்றெ மக்கோர் சரணில்லை’

என்ன அரனாவன் என்னும் அருளால்