பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பரகாலன் பைந்தமிழ்

(அரிசுழல்-சுருண்ட கூந்தல்; கனிவாய்.கொல் வைக் கனிபோன்ற திருப்பவளம்; திரு-பிராட்டி, பிரித்த-வேறு படுத்தின; எரிவிழி-நெருப்பு போன்ற கண்; வரிசிலை-அழகியவில்; அடுசரம்கொலை அம்பு; துரந்து-பிரயோகித்து; மறி. அலைமறிகின்ற நெறிபட-வழி அமைந்திட: அரி குலம்-வானரக்குலம்)

என்ற திருவரங்கப் பெருமானைப்பற்றிய பாசுரத்தில் இராவணன் முடிய இலங்கைபாழ்பட வாணர முதலி களைத் துணைகொண்டு கடலில் அணைகட்டின பெரு மான் அரங்கமாநகர் அமர்ந்தான் என்கின்றார்.

ஒரு பாசுரத்தில் நேராக இராமாவதாரத்தையே பேசி அநுபவிக்கின்றார் பல அவதாரங்களைப் பற்றித் தனித்தனியே பேசி மகிழும் ஆழ்வார்.

இலைமலி பள்ளி எய்தி இதுமாயம் என்ன

இனமாய மான்பின் எழில்சேர்

அலைமலி வேற்க ணாளை அகல்விப்பதற்கொர்

உருவாய மானை அமையா

கொலைமலி எய்து வித்த கொடியோன் இலங்கை

பொடியாக வென்றி அமருள்

சிலைமலி செஞ்ச ரங்கள் செலவுய்த்த நங்கள்

திருமால் நமக்குகார் அரனே 11.4;7 (இலைமலி பள்ளி பர்னசாலை; அலைமறிதுன்பப் படுத்தும் இயல்பு: அகல்விப்பதற்கு. பிரிப்பதற்கு இனமாயமான் பின்- மான்களின் பின், ஓர் உரு ஆய-மிக அழகிய உருவம்; மானைமாரீசனாகிற மாய மானை, அமையா-கொன்று; கொடியோன்-இராவணன்: வென்றி அமர்வெற்றிப்போர்; சிலைமலி-வில்லில் நிறைந்த, உய்த்த - பிரயோகித்த)