பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 பரகாலன் பைந்தமிழ்

---

மங்களாசாசனம் செய்யும்போது இவை ஆழ்வார் மனத் தில் எழுகின்றன.

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளை தன்னைப்

பிணைமருப்பில் கருங்களிற்றைப்

பிணைமான் நோக்கின் ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்த கோவை

அந்தணர்தம் அமுதத்தைக் குரவை முன்னே கோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்

கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை (2.5:4)

(பேய்த்தாய் - பூதனை; ஆய்த்தாயார் - யசோதைப் பிராட்டி; குரவை - இராசக் கிரீடை, குன்றம் - கோவர்த்தனம்)

கடல்மல்லைத் தலசயனப் பெருமாளை மங்களா சாசனம் செய்யும்போது பூதனையின் உயிர் உண்டது, யசோதைப் பிராட்டியின் வெண்ணெயில் ஊன்றியிருந்தது இடைப் பெண்களுடன் இராசக்கிரீடை கோத்தது, குடம் ஆடியது, கோவர்த்தனத்தைத் துக்கி ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தது போன்ற கண்ணனது திரு விளையாடல்களை அதுசந்தித்து அகம் மகிழ்கின்றார்.

திருக்கோவலூர் திரிவிக்கிரமனை மங்களாசாசனம் செய்யும்போது,

உறிஆர்ந்த நறுவெண்ணெய் ஒளியால்சென்று அங்கு

உண்டானைக் கண்டுஆய்ச்சி உரலோடு ஆர்க்க தறிஆர்ந்த கருங்களிறே போல நின்று

தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை

(2.10: 6)