பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

玺”罗 பரகாலன் பைந்தமிழ்

தேனுகன் ஆவி போயுக அங்கோர் செழுந்திரன் பனங்கனி உதிர தானுகந் தெறிந்த தடங்கடல் வண்ணர் (9.8:7)

(தேனுகன்-கழுதை வடிவமாக வந்த அசுரன்' உகந்த-மனம் உவந்த, கடல் வண்னர்-பெரு மாள்; என்று கண்ணன் தேனுகனை வதைத்த செயலை அதுசந் தித்து அகமகிழ்கின்றார். இங்ங்னம் கண்ணின் திருவிளை யாடல்கள் சொல்லி முடியா; பன்னியுரைக்கில் பாரதமாக விரியும்.

கல்கி அவதாரம்: இந்த அவதாரத்தைப் பற்றிய குறிப்பு அரிதாகவே காணப்பெறுகின்றது. கடல் மல் லைத் தலசயனப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் பாசுரம் ஒன்றில்,

வையங் காக்கும் கரும்பரிமேல் கற்கியைநான்

கண்டு கொண்டேன் (2.5:3)

(வையம்-உலகம்; கடும்பரி-கடுநடையைrடைய

குதிரை, கற்கியை-கல்கி அவதாரத்தை]

என்று இந்த அவதாரம் குறிப்பிடப் பெறுகின்றது. அறங் கள் முற்றும் குன்றி மறங்கள் அதிகரித்துக் கலி முற்றுங் காலத்தில் எம்பெருமான் குதிரைமீது ஏறி வந்து கல்கி என்னும் திருநாமமுடையவனாய்த் துட்டர்களைத் தொலைத்து மண்ணின் பாரம் நீக்குவான் என்பது நூற். கொள்கை. இது பவிஷ்யதவதாரம்; அதாவது வரப் போகின்ற அவதாரமாகும்.

9. பூமிதேவிக்குத் தன்மீது நல்லவர்கள் கோடிக் கணக்காக இருப்பினும் அவர்களைச் சுமிப்பது இலவம் பஞ்ன்சிப் போல் வருத்தமற்றிருக்கும்:ஒரு