பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 பரகாலன் பைந்தமிழ்

—.

மான். இந்த எம்பெருமானே புள்ளம் பூதங் குடியில் எழுந்தருளியிருப்பதாக நினைந்து அநுபவிக்கின்றார் ஆழ்வார்.

திருவரங்கப் பெருமானை மங்களாசாசனம் செய்த பாசுரம் ஒன்றிலும் இந்த வராறு அநுசந்திக்கப்பெறு கின்றது.

மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்

வானமும் தானவ ருலகும் துன்னுமா இருளாய்த் துலங்கொளி சுருங்கித் தொல்லைநான் மறைகளும் மறைய பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்

பிறங்கிருள் நிறங்கெட ஒருநாள் அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான் (5.7:3)

(மன்னு - நிலைப்பெற்ற, வானம் - ஆகாயம்; துன்னு - நெருங்கிய; துலங்கு - விளங்கும்; தொல்லை நான்மறைகள் - பழைய வேதங்கள்) என்ற பாசுரத்தில் இதனைக் கண்டு மகிழலாம்.

அயக்கிரீவ அவதாார அநுபவம் : அழுந்துர் மேவிய ஆமருவி அப்பனை மங்களாசாசனம் செய்யும் பாசுரம் ஒன்றில் இந்த அவதாரர் மூர்த்தியை அநுசந்திந்து அக மகிழ்கின்றார் ஆழ்வார்.

முன்னில் உல கேழுமிருள் மண்டி யுண்ண

முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய எம் பரமன் (7.8:2) (முன்-முற்காலத்தில்; இருள்-அஞ்ஞானம்; மண்டி -மிகுந்து; உண்ண - தன்வசமாக்கிக் கொள்ள: திசைப்ப-கலங்க; பரிமுகமாய்-அயக்கிரீவ மூர்த்

தியாய்!