பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையதுபவம் 475

முன்னொரு காலத்தில் மதுகை பர் என்னும் அசுரர்கள் நான்முகனிடமிருந்து நான்மறைகளை அபகரித்துக் கொண்டு கடலில் மூழ்கிவிட, ஞானத்திற்குத் துணையான வேதங்களை இழந்ததனால் எல்லா உலகங்களும் அஞ் ஞான இருளில் அழுந்திவிட, எம்பெருமான் அயக்கிரீவ அவதாரம் செய்து வேதங்களை மீட்டுக் கொணர்ந்தான். இந்த எம்பெருமான்தான் திருவழுந்துாரில் எழுந்தருளி யிருப்பதாகக் கருதுகின்றார். திருவெள்ளறை எம்பெரு மானை மங்களாசாசனம் செய்யும்போது இந்த அவ தாரத்தை அதுசந்திக்கின்றார்.

வசையில் நான்மறை கெடுத்த அம் மலரயற்

கருளிமுன் பரிமுகமாய் இசைகொள் வேதநூல் என்றவை பயந்தவனே. (5.3:2)

(வசை-குற்றம் கெடுத்த-போக்கடித்து வருந்தி நின்ற; மலரயன்-பிரமன்; பரிமுகமாய்-அயக் கிரீவ அவதாரமாய்!

என்ற பாசுரப் பகுதியில் இந்த அவதாரம் குறிப்பிடப் பெற்றுள்ளதைக் காணலாம். சுவாமிதேசிகன் திருவயிந்திர புரம் ஒளஷதாத்திரி என்னும் குன்றில் அயக்கிரிவ மந்தி ரத்தை ஆவ்ருத்தி செய்தபோது, அயக்கிரீவன் பிரசன் னாகி சுவாமிக்கு விசேஷகடாட்சம் செய்தருளினதாக

வரலாறு.

ஆழ்வார்கள் பாசுரங்களில் கிருட்டிணாவதாரமும் இராமாவதாரமும் அதிகமாகக் காணப்பெறுகின்றன. காரணம், இவர்கள் மக்களிடையே பிறந்து வளர்ந்து மக்களோடு அதிகமாகப் பழகி இக வாழ்வு வாழ்ந்த தால் அவர்கள் அதிகமாகக் கொண்டாடப் பெற்றுள்ள னர் என்று கருதலாம். ஆனால் கண்ணனின் மூத்த சகோதரன், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் நம்பி மூத்தபிரானும் பரசுராமனும் மக்களின் நடுவே