பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, வளர்ப்பு, திருமணம் 3.

அண்ணன் கோயில்’ என வழங்கும் திருவெள்ளக் குளம் என்னும் திருப்பதியில் மருத்துவத் தொழிலை மேற்கொண் டிருந்த வைணவர் ஒருவர் இருந்தார். இவருக்கு மக்கட் பேறு இல்லாதிருந்தது. அந்த ஊரிலுள்ள தாமரைப் பொய்கையில் சில தேவ கன்னிகையர் நாடோறும் நீராடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். ஒருநாள் அவர்களுள் ஒருத்தியான திருமாமகள் என்பாள் தன் இச்சையால் தேவ வடிவம் துறந்து மானுட வடிவம் கொண்டு குமுத மலர் கொய்து நின்றாள். ஏனையவர் நீங்கிப் போக இவள் மட்டிலும் தனித்து நின்றாள். அப்பொழுது மருத் துவர் அநுட்டானத்திற்காக அப்பொய்கைக்கு வர நேர்ந் தது. அவர் தணித்து நின்ற அம்மங்கையை நோக்கி பிள் ளாய் நீ யார்? தனித்து நிற்கக் காரணம் என்ன?’ என்று வினவ, அவளும் ஐயா, என்னோடு வந்த மங்கையர் என்னை விட்டு நீங்கிப் போயினர். இனி, என்னை உம்மோடு வைத்துக் கொள்ளுவீர்” என வேண்டினாள்.

மக்கட்பேறு இல்லாத அந்த பாகவதோத்தமர் மிக வும் உவப்புடன் இந்தப் பெண்மணியை அழைத்துக் கொண்டு தம் இல்லம் சென்று தம் துணை விக்குக் காட்டித் தந்தார். அந்த அம்மையாரும் இவளை மிக்க மகிழ்ச்சியு டன் ஏற்றுக்கொண்டார். இவர் குமுதமலர் கொய்து நின் றதுவே காரணமாக குமுதவல்லி என்ற திருநாமமிட்டு அவளை அவர்கள் வளர்த்து வந்தனர். நாளடைவில் அக் கன்னிகையும் மணப்பருவம் எய்தினாள். அவளை வளர்த்து வந்த மருத்துவருக்கு குணநலனும் உருவ நலனும் உள்ள இந்நங்கைக்கு ஏற்ற கணவன் எப்படிக் கிடைக்கப் போகின்றானோ? என்ற கவலை எழத் தொடங்கியது.

இந்நிலையில் இந்நங்கையைப் பற்றிய செய்தி மங்கை மன்னனுக்கு எட்டியது. உடனே அரசரும் அந்த அழகிய நங்கையைக் காண்பதற்கு ஆசை கொண்டு திருவெள்ளக்