பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையநுபவம் 483

எதிர் நோக்கி இருந்தனர். அவர்கள் மனோராதம் நிறை வேறியது. இவ்வளவே போதுமானது; இனி எங்களைப் பொருட்படுத்தாது ஒழியவேண்டும்” என்று வேண்டு கின்றனர்.

'தடம் பொங்கத்தம் பொங்கோ - என்ற முடிபை யுடையன இத் திருமொழிப் பாசுரங்கள், இத்தொடர் இவ்வருளிச் செயல் தவிர வேறு எவ்விடத்தும் கையாளப் பெற்றதாக அறியக் கூட வில்லை. இஃது ஒரு சங்கேத சப்தாதுகாரம் (பொருளற்ற ஒரு சொற்றொடர்) என்றே தோன்றுகின்றது. தோற்றவர்கள் தோல் வியாலே பறை யடிக்க ஆவதொரு கூத்துண்டு; அந்த சப்தாறுகாாம்' என்று மட்டிலுமே பெரிய வாச்சான் பிள்ளையும் அருளிச் செய்திருப்பதைக் காண்கின்றோம்.

அடுத்த திருமொழியும் (10.3) இலங்கை அரக்கர் களின் பாசுரமாகவே நடைபெறுகின்றது. அந்த அரக்கர் கள் நிலையில் நின்று ஆழ்வார் பூரீராம விஜயத்தைப் பேசிய நுபவிக்கின்றார் இத் திருமொழியில்.

  • எம்பி ரானே! என்னை

யாள்வாய்!” என்றென் றலற்றாதே அம்பின் வாய்ப்பட் டாற்ற

கில்லா திந்திர சித்தழிந்தான் நம்பி அநுமா! சுக்கி

ரீவா! அங்கத னே! நளனே! கும்ப கர்ணன் பட்டுப்

போனான்-குழமணி துரமே (2) (அலற்றாதே-கோஷம் போடாமல்; வாய்பட்டுஇரையாகி; ஆற்றகில்லாது- தரித்திருக்க ՅՔւգ-ԱյՌr மல்; பட்டுப் போனான்-முடிந்து போனான்) என்பது இத்திருமொழியின் இரண்டாம் பாசுரம், எல்லாப் பாசுரங்களும் "குழமணிதுாரமே என்று இறுகின்றன.